மம்மிகளுக்கு சிடி ஸ்கேன் எடுக்கும் ஆராய்ச்சியாளர்கள்...

இத்தாலியில் மம்மிகளை ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர்கள் மம்மிகளுக்கு சிடி ஸ்கேன் எடுத்தனர்.
மம்மிகளுக்கு சிடி ஸ்கேன் எடுக்கும் ஆராய்ச்சியாளர்கள்...
Published on
Updated on
1 min read
இத்தாலியில் மம்மிகளை கொண்டு பல கட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் ஆராய்ச்சியாளர்கள், அவர்கள் எந்த காலத்தில் வாழ்ந்தவர்கள், உயிரிழக்கும்போது அவர்களது வயது என்ன உள்ளிட்ட விவரங்களை உறுதி செய்து வருகின்றனர். 
அண்மையில் எகிப்தில் வசிக்கும் ஒருவர், இத்தாலி தூதரகத்திற்கு மம்மி ஒன்றை வழங்கியுள்ளார். அதனை சிடி ஸ்கேன் ஆய்வுக்கு உட்படுத்திய ஆராய்ச்சியாளர்கள், அந்த மம்மி கி.மு.900களில் வாழ்ந்த ஒருவருடையது என அடையாளம் கண்டுள்ளனர்.
மம்மி பற்றிய கூடுதல் தகவலுக்காக சிடிஸ்கேன் எடுப்பதாக தெரிவிக்கும் ஆராய்ச்சியாளர் ஒருவர், போலந்து வார்ஸாவில், ஆண் சடலம் என நினைத்து மம்மியை சிடி ஸ்கேன் ஆய்வுக்கு உட்படுத்தியபோது, அது 20 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி மம்மி என அடையாளம் தெரிந்ததாக கூறினார்.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com