ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் - ஜெய்சங்கர் விளக்கம்!

ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் - ஜெய்சங்கர் விளக்கம்!

Published on

ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா தீர்மானத்தில், யாருக்கு ஆதரவு என்பதை இந்தியா முன்கூட்டியே தெரிவிக்க விரும்பவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 


நியூசிலாந்து பயணத்தை தொடர்ந்து நடப்பாண்டில் 2வது முறையாக ஆஸ்திரேலியா சென்ற ஜெய்சங்கருக்கு, கேன்பெர்ராவில் உள்ள நாடாளுமன்ற இல்லத்தை மூவர்ண தேசியக்கொடி நிறத்தில் ஒளிரவிட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் இன்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த ஜெய்சங்கர், ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நாவில் கொண்டு வரப்படவுள்ள வரைவு தீர்மானத்தில், இந்தியா தனது நலன் சார்ந்தே வாக்கெடுப்பில் கலந்து கொள்வது  குறித்து முடிவெடுக்கும் என தெரிவித்துள்ளார். இந்தியாவின் முடிவு உலக மக்களுக்கும் பயனுள்ளதாகவே இருக்கும் என்றும் கூறியுள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com