ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ரஷ்யா கொடுத்த பதிலடி...!

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ரஷ்யா கொடுத்த பதிலடி...!

Published on

ஐரோப்பிய ஒன்றியத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் ரஷ்யா நாள்தோறும் அதிக அளவிலான இயற்கை எரிவாயுவை எரித்து வீணாக்குவதாக நார்வே விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எரிவாயு அளவை குறைத்த ரஷ்யா:

உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுத உதவி, ரஷ்யா மீது அடுத்தடுத்து பொருளாதாரத் தடை என்ற வகையில் செயல்படும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பதிலடி தரும் விதமாக Nord Stream 1 குழாய் வழி எரிவாயு அளவை ரஷ்யா அதிரடியாகக் குறைத்தது. இதனால் ஐரோப்பா முழுவதும் மின்தடை மற்றும் எரிசக்தி தட்டுப்பாடு பரவலாக இருந்து வருகிறது.  

அதிகளவில் இயற்கை எரிவாயு எரிப்பு:

இந்தநிலையில், பின்லாந்து எல்லையை ஒட்டியுள்ள போர்டோவாயாவில் உள்ள ரஷ்யாவின் காஸ்ப்ரோ கம்ப்ரசர் ஆலையில் மிகப்பெரிய அளவில் இயற்கை எரிவாயு எரிக்கப்படுவதை செயற்கைகோள் புகைப்படங்கள் காட்டுவதாக நார்வேயின் ரைஸ்டாட் எனர்ஜி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். நாள்தோறும் சுமார் 4 புள்ளி 34 மில்லியன் கன மீட்டர் எரிவாயு எரிக்கப்படுவதாகவும்,  அதன் மதிப்பு 10 மில்லியன் டாலர் என்றும் மதிப்பிட்டுள்ளனர்.

சுற்றுச்சூழல் பேரழிவு எச்சரிக்கை:

தொடர்ந்து, எரிவதற்கான சரியான காரணங்கள் தெரியவில்லை என்றாலும், எரிபொருளின் அளவு, உமிழ்வுகள் மற்றும் இருப்பிடம் ஆகியவை ஐரோப்பாவின் எரிவாயுத் தட்டுப்பாட்டை அதிகரிப்பதுடன் சுற்றுச்சூழல் பேரழிவையும் ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com