கட்டுபாடுகளை நீக்கிய சவுதி அரேபியா....!!!

கட்டுபாடுகளை நீக்கிய சவுதி அரேபியா....!!!
Published on
Updated on
1 min read

மெக்காவுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை மற்றும் வயது வரம்பு மீதான கட்டுப்பாடுகளை சவுதி அரேபியா நீக்கியுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டு சவுதி அரேபியா செல்வது வழக்கம்.  இந்நிலையில் சவுதி அரேபியா ஹஜ் பயண அமைச்சர் தவ்பிக் அல் ரபியா, பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை மற்றும் வயது வரம்பில் இனி கட்டுப்பாடில்லை என அறிவித்துள்ளார்.  

கொரோனா பரவலால் கடந்த இரு ஆண்டுகளாக, ஹஜ் பயணத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com