நேபாள பிரதமராக ஷோ பகதூா் தாபா பதவியேற்பு..!

நேபாள பிரதமராக ஷோ பகதூா் தாபா பதவியேற்பு
நேபாள பிரதமராக ஷோ பகதூா் தாபா பதவியேற்பு..!
Published on
Updated on
1 min read

நேபாள பிரதமராக ஷோ பகதூா் தாபா நேற்று பதவியேற்றுக் கொண்டார். முன்னாள் பிரதமா் கே.பி.சா்மா ஒலியின் பரிந்துரையை ஏற்று, 275 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்ற கீழவையை அதிபா் வித்யாதேவி பண்டாரி கடந்த மே 22ஆம் தேதி கலைத்து உத்தரவிட்டாா். கீழவைக்கு நவம்பா் 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில் முன்னாள் பிரதமர் கே.பி.சா்மா ஒலியின் பரிந்துரையை ஏற்று கீழவையை அதிபர் வித்யாதேவி பண்டாரி கலைத்தது செல்லாது எனவும், ஜூலை 13க்குள் புதிய பிரதமராக நேபாள காங்கிரஸ் தலைவர் ஷோ பகதூா் தாபா பதவியேற்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து ஷோ பகதூருக்கு அதிபர் வித்யாதேவி நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com