மகாராணி சவப்பெட்டி மீது வீசிய சூரிய கதிர்!!! நெகிழ வைத்த சம்பவம்!!!

மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல் அவரது சவப்பெட்டி மீது, ஒரே ஒரு சூரிய கதிர் வீசிய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இதன் போட்டோ இணையத்தில் பெடு வைரலாகி வருகிறது.
மகாராணி சவப்பெட்டி மீது வீசிய சூரிய கதிர்!!! நெகிழ வைத்த சம்பவம்!!!
Published on
Updated on
1 min read

மகாராணி இரண்டாம் எலிசபெத் சமீபத்தில் இறந்ததை அடுத்து, உலக மக்கள் தங்களது வருத்தங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது மகாராணியின் இறுதி சடங்கில் ஒரு நெகிழ வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

மறைந்த மகாராணி விடைபெறுவதை நேரில் காண நூறாயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் வரிசையாக நின்றிருந்தபோது, ​​வானங்கள் திறக்கப்பட்டது. அப்போது, மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் சவப்பெட்டியின் மீது சூரிய ஒளியின் ஒரு கதிர் பிரகாசித்தது.

ஏற்கனவே, மகாராணியின் இறப்புக்கு முன் வானில் ஒரு அழகான வானவில் தோன்றிய நிலையில், இச்சம்பவம், உலக மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com