சொத்தை விற்று.. ஆன்லைன் காதலியை பார்க்க சென்ற காதலன்! 1200 மைல்கள் தாண்டிச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்! அது பொண்ணே இல்லையா?

அந்த பெண் செயற்கை நுண்ணறிவினால் உருவாக்கப்பட்டவர் என்று சிறிதளவு சந்தேகம் கூட அந்த நபருக்கு வரவில்லை.
AI-generated woman
AI-generated woman
Published on: 
Updated on: 
1 min read

பிரேசிலைச் சேர்ந்த ஒருவர், தான் திருமணம் செய்துகொள்ள விரும்பிய பெண்ணைச் சந்திப்பதற்காகத் தனது உடைமைகள் அனைத்தையும் விற்று விட்டு, 1,200 மைல்களுக்கும் மேலாகப் பயணம் செய்து அந்த பெண்ணின் ஊருக்கு சென்றுள்ளார். ஆனால், இறுதியில் தனது காதலி ஒரு செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட பெண் என்பதை கண்டறிந்து ஏமாற்றமடைந்துள்ளார்.

49 வயதான எடிமர் மார்டின்ஸ், 2020-ம் ஆண்டில் ஜெசிகா ஒலிவேரியா என்ற பெயரில் இருந்த ஒரு சமூக ஊடகக் கணக்கை முதன்முதலில் கண்டுள்ளார்.

அந்த பெண் செயற்கை நுண்ணறிவினால் உருவாக்கப்பட்டவர் என்று சிறிதளவு சந்தேகம் கூட அந்த நபருக்கு வரவில்லை. இதனையடுத்து, கடந்த வாரம் தனக்கான காதலியை சந்திப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளார். அதன் பின்னர், தனது உடைமைகள் அனைத்தையும் விற்றுவிட்டு, 1,200 மைல்களுக்கும் மேலாகப் பயணம் செய்துள்ளார்.

அக்டோபர் 11 அன்று மார்டின்ஸ் பெலோ ஹொரிசோன்டேக்கு வந்துள்ளார். பல இடங்களில் அவர் அந்த பெண்ணின் புகைப்படத்தை காண்பித்து அவரை பற்றி கேட்டுள்ளார். ஆனால், அந்த பெண்ணை யாருக்கும் தெரியவில்லை. ஆனாலும், கொஞ்சமும் சோர்வடையாமல் அங்குள்ள வானொலி நிலையத்திற்கு சென்றுள்ளார். "நான் அங்குள்ள வானொலி நிலையத்திற்குச் சென்றேன், அவர்கள், 'இல்லை, அப்படி ஒரு பெண் இல்லை' என்று சொன்னார்கள்," என்று தெரிவித்துள்ளார்.

இறுதியில் மார்டின்ஸிடம் பணம் தீர்ந்துபோக, அவர் பெலோ ஹொரிசோன்டே நகர மன்றத்திற்குச் சென்றுள்ளார். அவர்களிடம் வெகு நாட்களாக தனிமையில் வாடி சோர்வடைந்ததாலேயே காதலுக்காக வெகுதூரம் பயணம் செய்ததாக ஒரு சமூகப் பணியாளரிடம் ஒப்புக்கொண்டு, வீடு திரும்புவதற்கான உதவியைப் பெற்றுள்ளார்.

300,000 ஃபாலோவேர்ஸ் கொண்ட @JessicaFazendeira என்ற பெயர்கொண்ட அந்த செயற்கை நுண்ணறிவு பெண் டிக்டாக் கணக்கிலிருந்து பின்னர் நீக்கப்பட்டுள்ளார். அந்தப் பெண், விரும்பும் ஆண் தனது பண்ணைக்கு வரலாம் என்றும் அவர்களது பொருளாதார செலவுகளை தான் பார்த்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கடந்த புதன்கிழமை (அக் 14) அன்று வீடியோ ஒன்றினை வெளியிட்டு தான் ஒரு செயற்கை நுண்ணறிவினால் உருவாக்கப்பட்ட ஒரு பெண் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். சிறிது இந்த விவகாரத்தில் மனசோர்வடைந்தாலும், "நான் அவளைக் கண்டுபிடிக்கவில்லை, ஆனால் நான் வேறொருவரைக் கண்டுபிடிப்பேன், அது நான் சென்ற அதே இடத்தில் இருக்கும், நான் மீண்டும் அங்கு செல்வேன்," என்று மார்டின்ஸ் உற்சாகமாக தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com