பெண் உடலில் 30 முறை உருமாறிய கொரோனா... பரவும் அபாயம்?

பெண் உடலில் 30 முறை உருமாறிய கொரோனா...  பரவும் அபாயம்?
Published on
Updated on
1 min read

தென் ஆப்பிரிக்காவில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் 216 நாட்களில்  கொரோனா தொற்று 30 முறை உருமாற்றம் அடைந்துள்ளது.

கொரோனா தொற்று அதிக பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்துகிறது.. இந்த தொற்றில் இருந்து மீள நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியே முக்கியம் ஆனால் எச்.ஐ.வி. புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாகவே இருக்கும். இதனால் கொரோனா தொற்று தாக்கும் போது அதன் பாதிப்பு தீவிரமாகவே இருக்கும். சாதாரண நபரை விட இவர்களை கொரோனா தொற்று பாதிக்கும் போது உயிரிழக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வில் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


தென் ஆப்பிரிக்காவில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 36 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இவரது, உடலில் 216 நாட்கள் கொரோனா வைரஸ் இருந்துள்ளது.தொற்று ஏற்பட்ட அந்த நாட்களில் 30 முறை வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.


இந்நிலையில் அந்த பெண்ணின் உடலில் உருமாறிய வைரஸ் பரவக்கூடிய வகை தானா என்பதை நிபுணர்கள் பரிசோதித்து வருகின்றனர்.
பொதுவாக எச்.ஐ.வி. நோயாளிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படும்போது உயிரிழக்கும் வாய்ப்பு அதிகம் ஆனால் இந்த பெண் விவகாரத்தில் உயிரிழப்பு விகிதம் எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com