இலங்கை அதிபர் தேர்தல் - ராஜபக்சே மகன் போட்டி

இலங்கை அதிபர் தேர்தல் - ராஜபக்சே மகன் போட்டி
Published on: 
Updated on: 
1 min read

இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 15ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் அதிபர் வேட்பாளராக நமல் ராஜபக்சே போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு அக்கட்சி வேட்பாளருக்கு தொழில் அதிபர் ஒருவர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் அவர் தனது முடிவை வாபஸ் பெற்றதால் நமல் ராஜபக்சேவுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com