சூடான் போர்: ” 31 லட்சம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர்” - ஐநா அறிவிப்பு..!

சூடான் போர்:   ” 31 லட்சம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர்” - ஐநா அறிவிப்பு..!
Published on: 
Updated on: 
1 min read

சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே நீடித்து வரும் உள்நாட்டு போர் காரணமாக 31 லட்சம் போ் புலம் பெயா்ந்து தவித்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

சூடானில் ராணுவத்துக்கும், ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கும் இடையே கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேல் நடைபெற்று வரும் மோதல் காரணமாக, 31 லட்சம் போ் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறி தவித்து வருகின்றனா்.

புலம் பெயா்ந்தவா்களில் 7 லட்சத்து 38 ஆயிரம் போ் சா்வதேச அகதிகளாகியுள்ளனா். அவா்கள், அண்டை நாடுகளான எகிப்து, சாட் போன்ற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனா்.

இதுவரை 3 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரம் போ் வரை உயிரிழந்திருப்பதாக ஐ.நா.வின் சா்வதேச அகதிகள் நலப் பிரிவு தெரிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com