
தாய்லாந்தைச் சேர்ந்த அழகிப் போட்டியாளரான சுபன்னி நோய்நொந்தோங் (Suphannee Noinonthong), தனது Miss Grand Prachuap Khiri Khan 2026 பட்டத்தை வென்ற ஒரே நாளில் இழந்துள்ளார். "பேபி" என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவருடைய ஆபாச வீடியோக்கள் வெளியானதே இதற்கு காரணம்.
கடந்த செப்டம்பர் 20 அன்று அவருக்குப் பட்டம் சூட்டப்பட்டதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் சில வீடியோக்கள் பரவத் தொடங்கின. அந்த வீடியோக்களில் நோய்நொந்தோங் பாலியல் பொம்மையைப் பயன்படுத்தி செக்ஸ் சேட்டைகள் செய்தது, மின் சிகரெட் பிடிப்பது இளஞ்சிவப்பு உள்ளாடையில் நடனமாடுவது போன்ற காட்சிகள் இருந்தன.
நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் செய்திப்படி, தாய்லாந்தின் மற்ற 76 மாகாணப் போட்டியாளர்களுடன் இணைந்து, நாட்டின் தேசியப் போட்டியான மிஸ் கிராண்ட் தாய்லாந்து 2026 போட்டியில் இவர் தனது மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தயாராக இருந்தார். ஆனால், செப்டம்பர் 21 அன்று, மிஸ் கிராண்ட் தாய்லாந்து போட்டிக் குழு இவரின் பட்டத்தை ரத்து செய்தது. ஏனெனில், இவரின் செயல்கள் போட்டி விதிகள் மற்றும் மதிப்புகளுக்கு முரணாக இருப்பதாக அக்குழு அறிவித்தது.
"தற்போதைய மிஸ் கிராண்ட் பிரச்சுவாப் கிரி கான் 2026, போட்டியாளர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய கொள்கைகள் மற்றும் உணர்வுகளுடன் ஒத்துப்போகாத சில நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அவரின் பதவியை முடிவுக்குக் கொண்டுவருவது அவசியமாகிறது," என்று போட்டிக் குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
27 வயதான சுபன்னி நோய்நொந்தோங் தனது ஃபேஸ்புக் பதிவில், போட்டிக் குழுவிடமும் தனது ஆதரவாளர்களிடமும் இந்த சம்பவம் குறித்து மன்னிப்புக் கோரியுள்ளார். தான் முன்பு நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்காக போஸ் கொடுத்ததை அவர் ஒப்புக்கொண்டார். கோவிட்-19 காலத்தில் ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடி காரணமாகவே, படுத்த படுக்கையாக இருந்த தனது தாய்க்கு (தற்போது இறந்துவிட்டார்) ஆதரவளிக்க, 'OnlyFans' என்ற பிரத்யேக பாலியல் உள்ளடக்க பக்கத்தை அவர் உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், "இந்தச் சம்பவம் எனக்கு ஒரு பெரிய பாடம். ஒவ்வொரு செயலுக்கும் பொறுப்பு உண்டு என்பதை இது எனக்கு முழுமையாக உணர்த்தியது. நான் என்னை மேம்படுத்திக்கொள்ள உறுதியளிக்கிறேன், மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வேன்," என்றும் உருக்கமாக தெரிவித்தார்.
மேலும், தனது ஆபாச வீடியோக்கள் சட்டவிரோத சூதாட்ட இணையதளங்களால் தனது அனுமதியின்றிப் பயன்படுத்தப்பட்டதாகவும், இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.