ஆஸ்திரேலியாவில் தாக்கப்பட்ட சுவாமிநாராயணன் கோயில்.....

ஆஸ்திரேலியாவில் தாக்கப்பட்ட சுவாமிநாராயணன் கோயில்.....
Published on: 
Updated on: 
1 min read

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள சுவாமிநாராயண் கோவிலில் தாக்குதல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

ஊடக தகவல்களின் படி, காலிஸ்தான் ஆதரவாளர்கள் இன்று காலை மெல்போர்ன் நகரின் வடக்கு புறநகரான மில் பார்க்கில் உள்ள சுவாமிநாராயண் கோவிலை தாக்கி சேதப்படுத்தியதாக தெரிய வந்துள்ளது.  

காலை வேளையில் மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது.  மேலும், கோயில் சுவர்களில் எதிர்ப்பு வாசகங்களும் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com