மருத்துவத்துறைக்கான நோபல் பரிசை தட்டி சென்றவர் யார்?

மருத்துவத்துறைக்கான நோபல் பரிசை தட்டி சென்றவர் யார்?
Published on
Updated on
1 min read

மரபியல் சார்ந்த ஆய்வில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய ஸ்வீடன் மரபணு நிபுணர் ஸ்வான்டே பாபோவுக்கு, 2022 ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

நோபல் பரிசு:

ஒவ்வொரு ஆண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதற்கென உலகம் முழுவதும் இருந்து விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் மனித உரிமை தலைவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் நடப்பாண்டு முதலாவதாக மருத்துவத்துறைக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்வீடனை சேர்ந்த மரபியல் நிபுணர் ஸ்வான்டே பாபோ இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டு சில கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக மனிதர்களில் அழிந்துபோன மூதாதையரான நியண்டர்டாலின் மரபணுவை வரிசைப்படுத்துதல், டெனிசோவா என்ற முன்னர் அறியப்படாத ஹோமினினை ஸ்வாண்டே ஆகியவற்றை கண்டறிந்து உள்ளார். 

தொடர்ந்து, நாளை இயற்பியலுக்கான விருதும்,  புதன்கிழமை வேதியியல் மற்றும் வியாழக்கிழமை இலக்கியம் துறைகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட உள்ளன.  அமைதிக்கான நோபல் பரிசு வருகிற வெள்ளிக்கிழமையும், பொருளாதார விருது வருகிற 10ம் தேதியும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com