ஐபிஎல் போட்டியை யாரும் ஆப்கானிஸ்தானில் பார்க்க கூடாது: ஐபிஎல் ஒளிபரப்புக்கு தடை விதித்த தலிபான்...

இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிராக இருப்பதால் ஐபிஎல் போட்டிக்கு ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.  
ஐபிஎல் போட்டியை யாரும் ஆப்கானிஸ்தானில் பார்க்க கூடாது: ஐபிஎல் ஒளிபரப்புக்கு தடை விதித்த தலிபான்...
Published on
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் அங்கு தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். இந்த நிலையில்  பெண்களுக்கு எதிரான பல கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் யார் அதிகாரத்திற்கு வருவது உள்ளிட்ட பல பிரச்சனைகள் நீடித்து வருகிறது. இந்த நிலையில் தான் ஐபிஎல் போட்டிக்கு தடை விதித்துள்ளனர்.

 கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல்ம் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 19ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இந்த ஐபிஎல் போட்டியை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்ப அந்நாட்டு தாலிபான் அரசு தடை விதித்துள்ளது. இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரான உள்ளடக்கங்கள் மற்றும் ஆப்கனில் தடை செய்யப்பட்ட வகையாக சிகையலங்காரத்துடன் பெண்கள் மைதான அரங்கில் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் தடை செய்யப்பட்டுள்ளதாக தாலிபான்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com