டாடா சன்ஸ் தலைவர் பதவி விவகாரத்தில் புதிய திருப்பம்? சந்திரசேகரன் மறுநியமனத்தை ஆதரிக்கும் சட்டக் கருத்து

நோயல் டாடா எதிராக வாக்களித்ததால் தேவையான ஆதரவு கிடைக்கவில்லை என்பதே Trusts-ன் நிலைப்பாடு...
Tata Sons N Chandrasekaran Reappointment
Tata Sons N Chandrasekaran Reappointment
Published on: 
Updated on: 
2 min read

டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனமான Tata Sons-ல் தலைவர் பதவி தொடர்பான விவகாரம் தற்போது சட்ட ரீதியான விவாதமாக மாறியுள்ளது. N. சந்திரசேகரனை மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு Tata Sons தலைவராக நியமித்த முடிவை Tata Trusts தலைவர் நோயல் டாடா எதிர்த்த நிலையில், அந்த முடிவு விதிமுறைகளின்படி செல்லுபடியாகும் என Tata Sons தெரிவித்துள்ளது. தனது நிலைப்பாட்டை ஆதரிக்க முன்னாள் தலைமை நீதிபதி U.U. லலித் மற்றும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி B.N. ஸ்ரீகிருஷ்ணா உள்ளிட்டோரின் சட்டக் கருத்துகளை Tata Sons முன்வைத்துள்ளது.

செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற Tata Sons நிர்வாகக் குழு கூட்டத்தில்தான் விவகாரம் தொடங்கியது. சந்திரசேகரனின் மறுநியமனத்துக்கு நான்கு இயக்குநர்கள் ஆதரவு தெரிவித்தனர். Tata Trusts சார்பில் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றிருந்த இரு உறுப்பினர்களில் ஒருவரான Venu Srinivasan ஆதரவாக வாக்களித்தார். மற்றொரு Trust nominee-யான Noel Tata எதிராக வாக்களித்தார். சந்திரசேகரன் தனது சொந்த மறுநியமனம் தொடர்பான விவாதத்தில் வாக்களிக்கவில்லை. இதையடுத்து கூட்டத்துக்கு தலைமை தாங்கிய Harish Manwani casting vote எனப்படும் கூடுதல் வாக்கை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதான் தற்போது எழுந்துள்ள முக்கிய சட்டக் கேள்வியாக மாறியுள்ளது. Tata Sons-ன் Articles of Association எனப்படும் நிறுவனத்தின் உள்நாட்டு விதிமுறைகளில், சில முக்கிய முடிவுகளுக்கு Tata Trusts சார்பில் நியமிக்கப்படும் இயக்குநர்களின் ஆதரவு தேவைப்படும் வகையில் விதிகள் உள்ளன. Tata Trusts தரப்பில், தங்களது இரு nominee directors-ல் பெரும்பான்மையினர் ஆதரவு தெரிவிக்காத நிலையில், தலைவர் தனது casting vote மூலம் அந்த குறைபாட்டை சரிசெய்ய முடியாது என்று வாதிடப்படுகிறது. நோயல் டாடா எதிராக வாக்களித்ததால் தேவையான ஆதரவு கிடைக்கவில்லை என்பதே Trusts-ன் நிலைப்பாடு.

இதற்கு மாறாக Tata Sons வேறு சட்ட விளக்கத்தை முன்வைக்கிறது. இயக்குநர்களிடையே வாக்குகள் சமமாகப் பிரிந்த சூழ்நிலையில், கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் நபருக்கு casting vote பயன்படுத்தும் அதிகாரம் இருப்பதாக நிறுவனம் கூறுகிறது. முன்னாள் தலைமை நீதிபதி U.U. லலித்தின் கருத்தும் இதை ஆதரிப்பதாக Tata Sons தெரிவித்துள்ளது. அவருடைய கருத்துப்படி, Article 104(B)-ன் கீழ் நியமிக்கப்பட்ட இயக்குநர்களிடையே வாக்குகள் சமமாக இருந்ததால், தலைமை வகித்த இயக்குநர் casting vote பயன்படுத்தியது Article 121-ன் தேவையை பூர்த்தி செய்ததாக கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் செப்டம்பர் 17ஆம் தேதி எடுக்கப்பட்ட முடிவு செல்லுபடியாகும் என்று அவர் கருத்து தெரிவித்ததாக Tata Sons கூறியுள்ளது.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி B.N. ஸ்ரீகிருஷ்ணாவின் சட்டக் கருத்தும் Tata Sons-ன் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக உள்ளது. இரண்டு Trust nominee directors-க்கும் இடையே ஏற்பட்ட 1-1 வாக்குப் பிரிவு ஒரு deadlock நிலையை உருவாக்கியதாகவும், அத்தகைய சூழ்நிலையில் Article 121-ன் கீழ் casting vote பயன்படுத்தப்பட்டதை விதிமுறைகளுக்கு ஏற்ப நடந்ததாகவும் அவரது கருத்து சுட்டிக்காட்டுகிறது. Trust nominee இயக்குநர் Venu Srinivasan, தனது சட்டப்பூர்வ பொறுப்புக்கு ஏற்ப வாக்களித்ததாகவும் அந்த கருத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு மாறான சட்டக் கருத்தையும் Tata Trusts முன்வைத்துள்ளது. முன்னாள் தலைமை நீதிபதி D.Y. சந்திரசூட் வழங்கிய கருத்தை Trusts தனது நிலைப்பாட்டுக்கு ஆதாரமாக குறிப்பிட்டுள்ளது. அவருடைய சட்ட விளக்கத்தின்படி, Trust nominee directors-ன் தேவையான ஆதரவு என்பது தனியான நிபந்தனை என்றும், முழு நிர்வாகக் குழுவில் ஏற்பட்ட வாக்கு நிலையை சமன் செய்ய பயன்படுத்தப்படும் casting vote மூலம் அந்த நிபந்தனையை மாற்ற முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட குழுவினரின் தேவையான ஆதரவு இல்லாதபோது casting vote மூலம் புதிய பெரும்பான்மையை உருவாக்க முடியாது என்பதே அந்த கருத்தின் அடிப்படை.

இந்த விவகாரத்தில் Tata Trusts நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக இருப்பதும் முக்கிய அம்சமாக உள்ளது. Tata Trusts, Tata Sons-ல் சுமார் 66 சதவீத பங்குகளை வைத்துள்ளது. அதனால் தலைவர் பதவி தொடர்பான முடிவுகளில் Trusts-ன் nominee directors-க்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மற்றும் Articles of Association-ல் உள்ள விதிமுறைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இதே விதிகள் தொடர்பாக கடந்த காலத்தில் நடந்த Cyrus Mistry தொடர்பான வழக்கிலும் விவாதங்கள் எழுந்திருந்தன.

மற்றொரு முக்கிய அம்சம், சந்திரசேகரன் முன்பு தனது தற்போதைய பதவிக்காலம் முடிந்த பிறகு மீண்டும் தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தது. பின்னர் Tata Sons நிர்வாகக் குழுவின் வேண்டுகோளைத் தொடர்ந்து அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய ஒப்புக்கொண்டார். அதன் பின்னரே ஐந்து ஆண்டுகளுக்கான மறுநியமன தீர்மானம் நிர்வாகக் குழுவில் கொண்டு வரப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது விவகாரம் இரண்டு மாறுபட்ட சட்ட விளக்கங்களுக்கு இடையிலானதாக மாறியுள்ளது. Tata Sons தனது முடிவு சட்டப்படி சரியானது என வலியுறுத்துகிறது. Tata Trusts அதனை ஏற்காமல், தேவையான nominee director ஆதரவு இல்லாததால் தீர்மானம் செல்லாது எனக் கூறுகிறது. இதனால் அடுத்தகட்டமாக இரு தரப்பும் எத்தகைய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன என்பதும், Articles of Association குறித்த இறுதி சட்ட விளக்கம் எவ்வாறு அமைகிறது என்பதும் முக்கியமாகியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com