உலகின் வலிமை சிறுவனாக புகழ்பெற்ற ஒருவரின் தற்போதைய நிலை...

8 வயதிலேயே உலகின் வலிமையான சிறுவனாக திகழ்ந்து வந்த ஒருவரின் தற்போதைய நிலையை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்
உலகின் வலிமை சிறுவனாக புகழ்பெற்ற ஒருவரின் தற்போதைய நிலை...
Published on
Updated on
1 min read

உக்ரனை சேர்ந்த முன்னாள் இளம் பாடி பில்டரான ரிச்சர்ட் சாண்ட்ராக் என்பவர் 1992 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். தன்னுடைய சிறு வயதிலேயே இவர் உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்வதில் வல்லாராக இருந்துள்ளார்.

வளர்ந்த பாடி பில்டர்களை போலவே இவர் தனது 8 வயதில் இருந்தே  வலிமையான உடற்கட்டு, சிக்ஸ் பேக்ஸ் , வலுவான தசை என தன்னுடைய உடலை கட்டுப்பாடாக வைத்திருந்தார்.அப்போதே அவர் ஒரு நாளைக்கு அவர் 7 முதல் 8 மணி நேரங்கள் என உடற்பயிற்சி செய்ததாக தெரிவித்துள்ளார். பெஞ்ச் பிரஸ் மூலம் 82 கிலோ வரையில் உயர்த்தியுள்ளார். மேலும் ஒரு நாளைக்கு 600 புஷ் அப் எடுக்கும் அளவுக்கு வல்லவராக இருந்துள்ளார். சிறு வயதில் அசாதாரண உடற்கட்டை மெருகேற்றி வந்த இவரது புகழ் ஊரெங்கும் பரவியது. இதனால் அவருக்கு "லிட்டில் ஹெர்குலிஸ்" என்ற "உலகின் வலிமையான சிறுவன்" எனும் பட்டம் பெற்றார்.

பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக சிறு வயதிலேயே கானப்பட்ட இவர், இப்போது தன்னுடைய 29-வது வயதில் யாரும் எதிர்பாரா வண்ணம் ஒரு சாதாரண இளைஞரை போலவே வலம் வருகிறார்.இதுகுறித்து அவர் கூறும்போது, 

நான் தற்போது முன்பு போல் உடற்பயிற்சி செய்வதில்லை. ஏனென்றால் அது எனக்கு சலிப்பை தருகிறது. எனது முந்தைய காலங்களை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தற்போது ஹாலிவுட்டில் ஸ்டண்ட்மேனாக பணிபுரிகிந்து வருகிறேன். நாசாவின் குவாண்டம் விஞ்ஞானியாக மாற வேண்டும் என்பது எனது கனவாகும். அதற்கு இந்த உடல்வடிவமே போதுமானது. இவ்வாறு அவர் கூறினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com