போதிய உணவின்றி தவிக்கும் மக்கள்...

ஆப்கானிஸ்தானில் 98 சதவீத மக்கள் உணவு இல்லாமல் தவித்து வரும் அவல நிலை.
போதிய உணவின்றி தவிக்கும் மக்கள்...
Published on
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானில் பணமதிப்பிழப்பு மற்றும் பணவீக்கம் போன்ற காரணங்களால் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் போதிய உணவு இல்லாமல் தவித்து வருவதாக உணவு திட்ட அமைப்பின் மூலம் சொல்லப்டுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தாலிபான்கள் ஆப்கானில் ஆட்சியை கைப்பற்றியது தொடர்ந்து பல்வேறு நாடுகள் அந்நாட்டிற்க்கு உதவும் பழக்கத்தை நிறுத்தியுள்ளனர்.

மேலும் விலைவாசி அனைத்திற்கும் அதிகமானது தொடர்ந்து மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் அவதிபட்டு வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். 

இதனை தொடர்ந்து ஜெனிவாவில் நடைபெற்ற மாநாட்டு ஒன்றில் உலக உணவு அமைப்பினர் செய்தியாளர்களிடம் பேசிய போது கிட்ட தட்ட 98 சதவீத மக்கள் அன்றாட உணவு இன்றி தவித்து வருவதாகவும், அதோடு அவர் இந்த ஆண்டில் தற்போது வரை சுமார் 1 கோடியே 50 லட்சம் பேருக்கு லட்சம் மக்களுக்கு உலக உணவு திட்ட அமைப்பின் மூலம் உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com