அரசு முறை பயணமாக எகிப்து சென்றார் பிரதமர் நரேந்திர மோடி...!

அரசு முறை பயணமாக எகிப்து சென்றார் பிரதமர் நரேந்திர மோடி...!
Published on
Updated on
1 min read

இரண்டு நாள் அரசு முறை பயணமாக எகிப்து சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு பிரதமர் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்த பயணத்தை முடித்துவிட்டு எகிப்து தலைநகர் கெய்ரோ சென்றடைந்தார். அங்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில்,  அவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

இதனை தொடர்ந்து கெய்ரோவில் உள்ள இந்தியாவின் புலம்பெயர்ந்த போஹ்ரா சமூகத்தை சேர்ந்தவர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் எகிப்திய அமைச்சரவையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்திய அதிகாரிகள் குழுக்களுடன், எகிப்து பிரதமர் முஸ்தபா மட்பௌலி தலைமையில் வட்டமேசை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வர்த்தகம் மற்றும் முதலீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் கட்டணத் தளங்கள், மருந்து மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை ஆழமாக்குவது குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த கூட்டத்திற்கு பின் எகிப்து நாட்டை சேர்ந்த யோகா ஆசிரியர்களான ரீம் ஜபக் மற்றும் நாடா அடெல் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடினர். தொடர்ந்து எகிப்தின் கிராண்ட் முப்தி ஷவ்கி இப்ராஹிம் அப்தெல்-கரீம் அல்லாமை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது பிரதமருக்கு சிறப்பு பரிசு ஒன்றையும் அவர் வழங்கினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com