பிரான்சில் அதிபரை பளார் என்று அறைந்த இளைஞர்!! வீடியோ உள்ளே

பிரான்ஸ் அதிபர் இமானவேல் மக்ரோனை இளைஞர் ஒருவர் பொதுவெளியில் அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சில் அதிபரை பளார் என்று அறைந்த இளைஞர்!! வீடியோ உள்ளே
Published on
Updated on
1 min read

தென்கிழக்கு பிரான்சில் உள்ள டிரோம் பகுதிக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சென்றிருந்த போது கொரோனா தொற்றுக்கு பிறகு இயல்பு நிலை உள்ளதா என்பது குறித்து விசாரித்தார்

அப்போது பலரும் அதிபரை பார்த்ததும் உற்சாகமாக குரல் கொடுத்தனர். அவர்கள் அருகே நடந்து சென்ற அதிபர் மேக்ரான் அவர்களிடம் நலம் விசாரித்தார். அப்போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் அதிபரை கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

மேக்ரான் ஒழிக என பிரெஞ்சு மொழியில் முழக்கம் எழுப்பியவாறே அந்த நபர் அறைந்தார். இதனையடுத்து அதிபரின் மேக்ரானை பாதுகாப்பாக அனுப்பி வைத்து விட்டு தாக்குதல் நடத்திய இளைஞரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பொதுவெளியில் பிரதமர் தாக்கப்பட்ட சம்பவம் பிரான்சில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com