

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு பெரும் எச்சரிக்கை விடுத்து, "இன்று இரவு முழு நாகரிகமும் அழிந்துவிடும்" என்று கூறியுள்ளார். 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் அவர் பதிவிட்ட ஒரு பதிவு போர் குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.
அதில் அவர் குறிப்பிட்டதாவது "இன்று இரவு ஒரு முழு நாகரிகமே அழிந்து விடும், அதை மீண்டும் ஒருபோதும் மீட்க முடியாது. அது நடக்க நான் விரும்பவில்லை, ஆனாலும் அது நடக்க கூடும்," என்று அவர் பதிவிட்டுள்ளார். இருப்பினும், இப்போது முழுமையான மற்றும் முழு கட்டுமான ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், வேறுபட்ட, புத்திசாலியான, குறைவான தீவிரப்படுத்தப்பட்ட சிந்தனைகள் மேலோங்கினால், புரட்சிகரமான ஏதோ ஒன்று நடைபெறக்கூடும், ‘யாருக்குத் தெரியும்?’ இன்றிரவு நாம் அதை அறிந்து கொள்வோம்; இது உலகின் நீண்ட மற்றும் சிக்கலான வரலாற்றில் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றாக இருக்கும்’” எனவும் குறிப்பிட்டுள்ளார். "47 ஆண்டுகால மிரட்டல், பணம் பறித்தல், ஊழல் மற்றும் மரணம் முடிவுக்கு வருகிறது" என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் “ஈரானிய மக்களை இறைவன் தான் அருளிக்க வேண்டும்” எனவும் மிரட்டலாக விடுத்துள்ளார்.
இருப்பினும் அவரது அறிக்கை ஒரு மாற்று வழிக்கான சாத்தியத்தை குறிப்பிட்டுள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான தனது செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி (EST) காலக்கெடுவை தெஹ்ரான் பூர்த்தி செய்யாவிட்டால், ஈரானிய உள்கட்டமைப்பை அழித்துவிடுவோம் என்று மீண்டும் அச்சுறுத்திய டிரம்ப், சாத்தியமான போர்க்குற்றங்களை செய்வது குறித்து தனக்கு "சற்றும்" கவலை இல்லை என்று திங்களன்று கூறியிருந்தார். பொதுமக்கள் உள்கட்டமைப்புகளை தாக்குவது சர்வதேச சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது என அமெரிக்காவை ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரித்ததாக, அவரது செய்தித் தொடர்பாளர் திங்களன்று தெரிவித்தார். அமெரிக்காவின் அழுத்தத்தை ஈரான் நிராகரித்துள்ளது, வெறும் போர் நிறுத்தம் என்பதற்குப் பதிலாக போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்துவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதையடுத்து இந்த பதிவை எச்சரிக்கையாக விடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். ஈரான் அரசும் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு மாதத்தை கடந்து தொடரும் இந்த போரின் உலக நாடுகளில் பலதரப்பட்ட நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக எரிபொருள் தட்டுப்பாடு, கடல் வழி பாதை ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் பெரும் சரிவை நோக்கி செல்கிறது. இந்நிலையில் இந்த பதிவு பல நாடுகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.