என்ன.. ட்ரம்ப் இறந்துட்டாரா? ட்விட்டரில் குவியும் ஆயிரக்கணக்கான பதிவுகள்!

கடந்த சில மாதங்களாக ட்ரம்பின் உடல்நிலை குறித்த பேச்சு பரவலாக இருந்து வருகிறது. அப்போதே, வெள்ளை மாளிகை இந்த வதந்திகளை உடனடியாக மறுத்தபோதிலும், சமீப நாட்களில் அவரது காயம் தொடர்பான படங்கள் சமூக ஊடகங்களில் புயலைக் கிளப்பியுள்ளன.
Trump dead twitter post
Trump dead twitter postTrump dead twitter post
Published on
Updated on
2 min read

சமூக வலைத்தளமான X-இல், 'ட்ரம்ப் இறந்துவிட்டார்' (Trump is dead) என்ற ஹேஷ்டேக்கில் 56,900-க்கும் மேற்பட்ட பதிவுகள் பதிவிடப்பட்டது வருகிறது. 79 வயதாகும் அவரது உடல்நிலை குறித்த பரவலான ஊகங்களுக்கு இந்தச் சம்பவம் வழிவகுத்துள்ளது. ஜூலை மாதத்தில் அவரது கையில் ஏற்பட்ட காயம் மற்றும் கணுக்காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக, கடந்த சில மாதங்களாக ட்ரம்பின் உடல்நிலை குறித்த பேச்சு பரவலாக இருந்து வருகிறது. அப்போதே, வெள்ளை மாளிகை இந்த வதந்திகளை உடனடியாக மறுத்தபோதிலும், சமீப நாட்களில் அவரது காயம் தொடர்பான படங்கள் சமூக ஊடகங்களில் புயலைக் கிளப்பியுள்ளன.

ஆகஸ்ட் 27 அன்று அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், USA Today-க்கு அளித்த பேட்டியில், "ஒரு பயங்கரமான துயரம்" ஏற்பட்டால் தாம் பதவி ஏற்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இருப்பினும், ட்ரம்ப் ஆரோக்கியமாகவும், ஆற்றலுடனும், "மிகவும் நல்ல உடல்நிலையில்" இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேசமயம், ட்ரம்ப் நல்ல உடல் நிலையில் இருப்பதாகவும், இரவு நேரத்திலும், அதிகாலையிலும் ஆற்றலுடன் தொடர்ந்து பணியாற்றுகிறார் என்றும் துணை அதிபர் தெளிவுபடுத்தினார். 79 வயதான ட்ரம்ப், அமெரிக்க வரலாற்றில் மிக வயதான அதிபராகப் பொறுப்பேற்றவர். அதேசமயம், 41 வயதான வான்ஸ், அமெரிக்க வரலாற்றில் மூன்றாவது இளம் துணை அதிபர் ஆவார்.

ட்ரம்ப் தொடர்ந்து பொது வெளியில் இல்லாதது குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இருப்பினும், இவை அனைத்தும் சமூக ஊடக வதந்திகள் என்றும், வெள்ளை மாளிகை மௌனம் காப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ட்ரம்ப் பொதுவெளியிலிருந்து முழுமையாக விலகிவிடவில்லை. ஏனெனில், அவரது கடைசிப் பதிவு ட்ரூத் சோஷியலில் (Truth Social) இன்று அதிகாலை 3.40 மணிக்கு வந்தது (வாஷிங்டன் டிசியில் வெள்ளிக்கிழமை மாலை 6.40 மணி). இந்தியா உட்பட பல நாடுகள் மீது அவர் விதித்த பரஸ்பர வர்த்தக வரிகளில் பெரும்பாலானவை "சட்டவிரோதம்" என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு அவர் பதிலளித்து இருக்கிறார்.

ட்ரம்ப் பற்றிய ஊகங்கள் திடீரென அதிகரித்தது, ஓவல் அலுவலகக் கூட்டத்தின் போது 79 வயதான அவரது வலது கையில் காயம் ஏற்பட்டு, மேக்கப் பூசப்பட்டு இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியான சில நாட்களுக்குப் பிறகுதான். இந்த வார தொடக்கத்தில், தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் உடன் அமெரிக்க அதிபர் இருக்கும் படங்களில், ட்ரம்பின் வலது கையின் பின்புறத்தில் காயங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னதாக, ஜூலை மாதத்தில், அவரது கணுக்கால்களில் வீக்கம் இருப்பதைக் காட்டும் படங்கள் வெளியான பிறகு, வெள்ளை மாளிகை கவலையை ஒப்புக்கொண்டது. மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு chronic venous insufficiency இருப்பது கண்டறியப்பட்டது. இது 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் பொதுவான ஒரு நோய் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

எனினும், ஒரு செய்தியாளர் சந்திப்பில், வெள்ளை மாளிகை செய்திச் செயலாளர் கரோலின் லீவிட் இந்த ஊகங்களை நிராகரித்தார். "அதிபர் ட்ரம்ப் மக்களின் தலைவர், அவர் வரலாற்றில் வேறு எந்த அதிபரை விடவும், தினசரி அடிப்படையில் அதிகமான அமெரிக்கர்களைச் சந்தித்து கைகுலுக்குகிறார். அவரது அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது, அதை அவர் தினமும் நிரூபிக்கிறார்," என்று அவர் கூறினார்.

ட்ரம்ப்பின் மருத்துவர் டாக்டர் சீன் பார்பபெல்லாவின் அறிக்கையையும் நிர்வாகம் வெளியிட்டது. அடிக்கடி கைகுலுக்குதல் மற்றும் ஆஸ்பிரின் பயன்பாடு ஆகியவற்றால் ஏற்படும் சிறு மென்மையான காயம் ஏற்படுவது சாதாரணமானது என்று அவர் எழுதியுள்ளார். ஆஸ்பிரின், வழக்கமான இருதய நோய்த் தடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது என்றும் விவரித்தார்.

ட்ரம்ப்பின் கை இதற்கு முன்பு கவனத்தை ஈர்த்துள்ளது. பிப்ரவரி மாதத்தில், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுடன் அவர் சந்திப்பின் போது இதேபோன்ற காயம் காணப்பட்டது. ஜூலை மாதத்தில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் உடனான ஸ்காட்லாந்து பேச்சுவார்த்தையின் புகைப்படங்களில், அதே கையில் மேக்கப் இருப்பதும் தெரியவந்துள்ளது, இது மேலும் ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

அதிகாரப்பூர்வ விளக்கங்கள் இருந்தபோதிலும், அமெரிக்க அதிபரின் உடல்நிலை குறித்த ஊகங்கள் ஆன்லைனில் தொடர்ந்து பரவி வருகின்றன. 'ட்ரம்ப் இறந்துவிட்டார்' என்பது தற்போது விவாதத்தைத் தூண்டும் ஒரு புதிய டிரெண்டாக மாறியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com