
உலகின் நம்பர் ஒன் பணக்காரராக எலான் மாஸ்க் -ம் அமெரிக்க அதிபர் டிரம்ப் -ம் கடந்த 9 மாதங்களாக மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். ஆனால் தற்போது இவர்கள் இருவரின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
DOGE -லிருந்து மஸ்க் விலகல்
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற மிக தீவிரமாக எலான் மஸ்க் ட்ரம்ப் -காக பிரச்சாரம் செய்தார். மேலும் அமெரிக்க தேர்தலின்போது அதிக அளவிலான பண உதவியையும் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு பிரதி உபாயமாக ட்ரம்ப், 'DOGE' என்னும் ஸ்பெஷல் துறையை தொடங்கினார். இது அமெரிக்க அரசின் தேவையில்லாத செலவுகளை குறைக்கவும், அரசு நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தவும் உதவக்கூடிய ஒரு துறை. இந்தத் துறையை எலானே தலைமை தங்குவார் எனக்கூறப்பட்டதற்கு சர்ச்சைகள் வலுத்ததை ஒட்டி, அவர் சம்பளம் பெறாத ஆலோசகராக பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்தான் தனது பணிக் காலம் முடிந்ததாகக்கூறி சில தினங்களுக்கு பின்னர் DOGE -லிருந்து மஸ்க் வெளியேறினார்.
வார்த்தை மோதல்
DOGE -லிருந்து வெளியேறிய மஸ்க் ட்ரம்ப் அரசின் 'one big beautiful’ என்ற வரி மற்றும் செலவு மசோதாவை மிக மோசமாக விமர்சித்தார். "மன்னிக்கவும், என்னால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இந்த மசோதாவில் பெரிய, மோசமான, தேவையற்ற விஷயங்கள் உள்ளது.. அருவருக்கத்தக்கது. இதற்கு வாக்களித்தவர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும். நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்." என விமர்சித்திருந்தார்.
அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த மசோதாவை தனது பொருளாதாரத் திட்டத்தின் முக்கிய பகுதியாக கருதுகிறார். இருப்பினும், நிதி ஆலோசகர்கள், வல்லுனர்கள் பலரும் இந்த மசோதவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு பதிலளித்த ட்ரம்ப் “இந்த மசோதா குறித்து இங்கு இருக்கும் முனிவரை விடவும் மஸ்க் -க்குத்தான் நிறைய தெரியும், நான் அவருக்கு நிறைய உதவி செய்திருகிக்கிறேன், அவரின் செயல்பாடுகளால் நான் அதிருப்தி அடைந்துள்ளேன், என்று பேசி உள்ளார்.
மஸ்க் போட்ட ‘பகீர்’ குண்டு!
இதுவரை இலை மறை பிரச்சனையாய் இருந்த இரு நண்பர்களின் விவகாரம் தற்போது பொதுவெளிக்கு வந்துள்ளது. இருவரும் X -தளத்தில் மாற்றி மாற்றி வசைப்பாடிக்கொண்டிருக்கின்றனர். இந்தச்சூழலில்தான்
மஸ்க் டிவிட்டரில் ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டுள்ளார். அது என்னவென்றால் “எப்ஸ்டீன் பைலில்” ட்ரம்ப் -ன் பெயர் உள்ளது என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். இது ட்ரம்ப் -ன் இமேஜை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
எப்ஸ்டீன் பைல் என்றால் என்ன?
அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்களோடு நெருக்கமாக இருந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். பெரும் பணக்காரராக விளங்கிய இவருக்கு சில கரீபியன் தீவுக்கூட்டங்கள் சொந்தமாக இருந்தது. பிரபலங்களை தனது கரீபியன் தீவுகளுக்கு அழைத்து சென்று “பாலியல் தொழில்” நடத்தியதாக இவர் மீது புகார் எழுந்தது. மேலும், பிரபலங்களுக்கு இவர் வழங்கிய பெண்கள் பெரும்பாலும் 18 வயதை அடையாத சிறுமிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 2005 -ல் 14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அதன் பின்னர்,13 மாதங்கள் கழித்து விடுதலையான இவர் மீண்டும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தெரிகிறது. தொடர்ந்து வந்த பாலியல் குற்றச்சாட்டுகளால் 2019 ஆம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். ஆனால் சிறையில் இருக்கும்போதே இவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்கிறார்.
இவரின் மரணத்திற்கு பிறகு ‘எப்ஸ்டீன்’ தொடர்பான வழக்கு ஆவணங்கள் நீதிமன்ற பாதுகாப்பிலே இருந்தன. சில தினங்களுக்கு பிறகு அது பொது வெளிச்சத்துக்கு வந்தது, எப்ஸ்டீனின் வாடிக்கையாளர்களாக 170 -க்கும் மேற்பட்ட பிரபலங்கள் இருந்துள்ளனர். அந்த ஆவணத்தில் தான் “முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், இங்கிலாந்து இளவரசர் ஆன்ட்ரூவ், மறைந்த அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் ஆகியோரின் பெயர்கள் இருந்தது அதிர்ச்சியை கிளப்பியிருந்தது. மேலும் அதில் இன்றைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் -ன் பெயரும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மஸ்க்-எதை குறிப்பிடுகிறார்?
ஏற்கனவே தான் ட்ரம்ப் - எப்ஸ்டீன் தொடர்பு அம்பலமாகியுள்ளதே இப்பொது மஸ்க் எதற்கு அதைப்பற்றி பேசுகிறார் என நீங்கள் கேட்கலாம். ட்ரம் ஆரம்பகாலங்களில் ஒரு தொழிலதிபராக இருந்தார், பின்னர் தான் அரசியல் பிரவேசம் வெளி உலகில் நிதி நிறுவன அதிபராக வலம் வந்த எப்ஸ்டீனோடு ட்ரம்ப் -க்கு இருந்த உறவு சாதாரணம் தான் என மறுக்க வாய்ப்புண்டு..
ஆனால் மஸ்க் சொல்ல வருவது, ‘ட்ரம்ப் பிரபலங்களுக்கு பெண்களை வழங்கும்” வேலையை செய்து வந்திருக்கலாம் என சில செய்திகள் குறிப்பிடுகின்றன. ஆனால் இவர்களின் மோதல் போக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஆர்வலர்கள் கணிக்கின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.