இரு ஆண்கள் பெற்றோர் சம்மதத்தோடு செய்து கொண்ட திருமணம்!!

இரு ஆண்கள் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் இந்தியாவில் அறங்கேறியுள்ளது.
இரு ஆண்கள் பெற்றோர் சம்மதத்தோடு செய்து கொண்ட திருமணம்!!
Published on
Updated on
1 min read

ஐதராபாத் புறநகரில் உள்ள ஒரு ரிசார்ட்டில் அபய் டாங்கே மற்றும் சுப்ரியோ சக்ரவர்த்தி ஆகிய இருவரும் நண்பர்களாக இருந்து தற்பொது திருமணம் செய்துள்ளனர். இவர்களது திருமணத்தில் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டதாக தெரிவித்தனர்.

இந்த திருமண விழாவில் 60 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.திருமணம் செய்து கொண்ட இருவரும் 8 வருட காலமாக நண்பர்களாக இருந்துள்ளனர்.பஞ்சாப் பகுதியை சேர்ந்த அபய் இ காமர்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் தகவல் தொழிநுட்ப வல்லுநராக பணிபுரிந்து வருகிறார்,சுப்ரியோ மேற்கு வங்கத்தை சேர்ந்தவராக சொல்லப்படுகிறது.

இதனால் இவர்களின் திருமணம் மேற்கு வங்காளம் மற்றும் பஞ்சாபி பாரம்பரியத்துடன் நடைபெற்று உள்ளது.அதேவேளை திருமண கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மெஹந்தி மற்றும் சங்கீத் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்று உள்ளன.சுப்ரியோவின் பெற்றோர்கள் ஆரம்பத்தில் இத்திருமணத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

இருப்பினும் அவர்களது உறவை பெற்றொர்கள் ஏற்றுக்கொண்ட நிலையில் இத்திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.இதுவரை ஓரினச்சேர்க்கை திருமணங்களை இந்தியாவில் சட்டப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com