2009ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களுக்கு 'புகைபிடிக்கத் தடை' - அரசின் புதிய அறிவிப்பு!

இங்கிலாந்து நாடாளுமன்றம், இளம் வயதிற்குட்பட்டோர் வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்குவதற்குத் தடை விதித்துள்ளது.
இளம் வயதிற்குட்பட்டோர் சிகரெட் வாங்குவதற்குத் தடை
இளம் வயதிற்குட்பட்டோர் சிகரெட் வாங்குவதற்குத் தடைஇளம் வயதிற்குட்பட்டோர் சிகரெட் வாங்குவதற்குத் தடை
Published on
Updated on
1 min read

இங்கிலாந்து நாடாளுமன்றம், இளம் வயதிற்குட்பட்டோர் வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்குவதற்குத் தடை விதிப்பதன் மூலம், "புகையற்ற தலைமுறைக்கு" வழிவகுக்கும் புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் புதிய சட்டத்தின்படி, 2009 ஜனவரி 1 அன்று மற்றும் அதற்குப் பிறகு பிறந்த யாரும் சிகரெட்டுகளை சட்டப்பூர்வமாக வாங்க இனி ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதன் விளைவாக, 17 வயது அல்லது அதற்குக் குறைவான வயதுடைய குழந்தைகள், புகைப்பிடிக்கும் பழக்கத்தை தங்களது வாழ்நாள் முழுக்க புகைக்காமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம், பத்தாண்டுகளில் எடுக்கப்பட்ட மிக முக்கியமான புகைப்பிடித்தல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த மசோதாவுக்கு அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன், புகையிலை, வேப்பிங் மற்றும் நிக்கோட்டின் பொருட்களை ஒழுங்குபடுத்துவதற்கான விரிவாக்கப்பட்ட அதிகாரங்களை அமைச்சர்கள் பெறுவார்கள் என்றும் மேலும், சுவைகள், பேக்கேஜிங் மற்றும் அத்தகைய தயாரிப்புகள் சந்தைப்படுத்தப்படும் விதம் ஆகியவற்றின் மீதான கடுமையான கட்டுப்பாடுகள் இதில் அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளால் தடுக்கக்கூடிய மரணங்களுக்கும், உடல்நலக் குறைபாட்டிற்கும் ஒரு முக்கிய காரணமாகத் திகழும் புகைப்பிடித்தல் தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கைகள் அவசியமானவை என்று அந்நாட்டு அரசாங்கம் கூறுகிறது. ஆனால், பப்கள், கடற்கரைகள் அல்லது தனியார் இடங்கள் போன்ற வெளிப்புற இடங்களுக்கு இந்த விதிகள் பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அந்நாட்டு சுகாதார அமைச்சர் பரோனஸ் மெர்ரான் இந்தச் சட்டத்தை ஒரு முக்கிய மைல்கல் என்று பாராட்டியதோடு, இது உயிர்களைக் காப்பாற்றும் “ஒரு தலைமுறையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய பொது சுகாதாரத் தலையீடு” என்றும் குறிப்பிட்டார். இருப்பினும், இந்த மசோதா சில தரப்பிலிருந்து விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இது சில்லறை விற்பனையாளர்களையும் புகையிலைத் தொழிலையும் எதிர்மறையாகப் பாதிக்கக்கூடும் என்றும், புகைப்பிடிப்பதைத் தடுக்க கல்வியே சிறந்தது என்று கூறப்பட்டுவருகிறது. தற்போது மாலத்தீவுகளில் மட்டுமே இதேபோன்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. அதனையடுத்து இங்கிலாந்திலும் தற்போது இந்த சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. மேலும், இங்கிலாந்தின் இந்த புதிய விதியானது ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நான்கு நாடுகளிலும் இந்த விதிகள் பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே அனைத்து சபைகளிலும் மூன்று வாசிப்புகளையும் கடந்துவிட்ட ஒரு மசோதாவை இறுதி செய்யும் பொருட்டு, அதில் கண்டறியப்பட்ட பிழைகளையும் குறைபாடுகளையும் நீக்கப்பட்ட பிறகு, 'ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ்' சபை திங்கட்கிழமை நடைபெற்ற அமர்வில் இறுதி ஒப்புதல் அளித்தது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com