டொனெட்ஸ்க் குடியரசுப் பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் மீது உக்ரைன் தாக்குதல்!

டொனெட்ஸ்க் குடியரசுப் பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் மீது உக்ரைன் தாக்குதல்!
Published on
Updated on
1 min read

உக்ரைனிலிருந்து சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்ட டொனெட்ஸ்க் மக்கள் குடியரசுப் பகுதியில் உள்ள கலாக்டிகா வணிக வளாகத்தின் மீது உக்ரைன் படைகள் எறிகணைத் தாக்குதல் நடத்தியதால், கட்டிடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது என்று டொனெட்ஸ்க் குடியரசின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வணிக வளாகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர், மேலும் உயிரிழப்பு எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆக்ஸ்ட் 23 அன்று, உக்ரைன் படைகள் பீரங்கி குண்டுகளை டொனெட்ஸ்கில் அடுக்குமாடி குடியிருப்புகள் மீது வீசியதில் பொது மக்கள் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் தலைவர் டெனிஸ் புஷிலின் அலுவலகம் நேரடியாக தாக்கப்பட்டது, அதே நேரத்தில் பத்திரிகையாளர்கள் வழக்கமாக தங்கும் ஒரு விடுதியும் சேதமடைந்தது. இந்தத் தாக்குதலில் நல்வாய்ப்பாக புஷிலின்  காயமின்று தப்பினார். கியேவ் உக்ரைன் இராணுவம் பயங்கரவாத முறையில் போர் புரிவதாக அவர் குற்றம் சாட்டினார்.

உக்ரைன் அரசுக்குள் ரஷ்ய மொழியினர் வசிக்கும் டொனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் பகுதிகளுக்கு சிறப்பு தகுதி வழங்க வடிவமைக்கப்பட்ட மின்ஸ்க் ஒப்பந்தங்களை உக்ரைன் செயல்படுத்த தவறியதை சுட்டிக்காட்டி பிப்ரவரி 24 அன்று டொனெட்ஸ்க் மற்றும் லுகென்ஸ்க் குடியரசுகளின் மக்களை பாதுகாக்க ரஷ்யா உக்ரைனுக்குள் படைகளை அனுப்பியது.

கடந்த பிப்ரவரி மாதம்  ரஷ்யா டொனெட்ஸ்க் மற்றும் லுகென்ஸ்க் குடியரசுகளை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com