“ஈரானின் முக்கிய பொருளாதார தளத்தை குறி வைத்த அமெரிக்கா” - கார்க் தீவில் வெடித்த குண்டு… மூடப்படுமா ஹார்முஸ் ஜலசந்தி?

எனது வழிகாட்டுதலில் கார்க் தீவில் உள்ள ராணுவ தளவாடங்கள் தாக்கப்பட்டுள்ளன...
“ஈரானின் முக்கிய பொருளாதார தளத்தை குறி வைத்த அமெரிக்கா” - கார்க் தீவில் வெடித்த குண்டு… மூடப்படுமா ஹார்முஸ் ஜலசந்தி?
Published on
Updated on
2 min read

ஈரானின் ‘கார்க் தீவு’ வளைகுடாவில் அமைந்துள்ள அந்நாட்டின் மிக முக்கியமான பொருளாதார மற்றும் மூலோபாய மையமாகும். இது ஈரானின் கடற்கரையிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும் அந்த நாட்டின் பொருளாதார உயிர்நாடியாக உள்ளது. ஈரானின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90% க்கும் அதிகமான ஏற்றுமதி இந்தத் தீவு வழியாகவே நடைபெறுகிறது. இது உலகின் மிகப்பெரிய கடல் வழி கச்சா எண்ணெய் முனையங்களில் ஒன்றாகும். இங்கு சுமார் 28 மில்லியன் பேரல் எண்ணெய் சேமித்து வைக்கும் வசதி உள்ளது. இது சுமார் 20 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட ஒரு சிறிய பவளத் தீவு ஆகும். ஆழமான கடல் பகுதியைக் கொண்டிருப்பதால், பெரிய எண்ணெய் கப்பல்கள் இங்கு எளிதாக வந்து செல்ல முடியும்.

இத்தீவு "தடைசெய்யப்பட்ட தீவு" என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு பண்டைய பாரசீக வளைகுடா தொடர்பான கல்வெட்டுகள் மற்றும் டச்சு கோட்டையின் சிதைவுகள் உள்ளன என்றும் குறிப்பிடப்படுகிறது. மார்ச் 14, 2026 அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தலின்படி, அமெரிக்க ராணுவம் கார்க் தீவில் உள்ள இராணுவ கட்டமைப்புகள் மீது மிகப்பெரிய குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரானின் ராணுவ இலக்குகள் மட்டுமே தாக்கப்பட்டதாகவும், உலகளாவிய எண்ணெய் சந்தையை பாதிக்காமல் இருக்க எண்ணெய் உள்கட்டமைப்புகள் தற்போது தாக்கப்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இருப்பினும், “ஹார்முஸ் கால்வாயை ஈரான் தொடர்ந்து முடக்கினால் எண்ணெய் மையங்களும் தாக்கப்படும்” என டிரம்ப் எச்சரித்துள்ளார். இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர்‌ ட்ரம்ப் கூறுகையில், "எனது வழிகாட்டுதலில் கார்க் தீவில் உள்ள ராணுவ தளவாடங்கள் தாக்கப்பட்டுள்ளன. எண்ணெய் உள்கட்டமைப்புகளின் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை.

இந்தத் தீவு மீதான தாக்குதலில் ஈரானின் பொருளாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாகவும், உலக அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பதற்குக் காரணமாகவும் அமையலாம் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இந்தத் தாக்குதலால் உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள். கார்க் தீவு ஈரானின் 90% எண்ணெய் ஏற்றுமதியை கையாளுவதால், அங்கு ஏற்படும் சிறிய பாதிப்பும் உலகளாவிய விநியோகச் சங்கிலியின் பெரும் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் என்ற பயம் முதலீட்டாளர்களிடம் எழுந்துள்ளது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் இன்று காலை ஈராக் தலைநகரான பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது ஈரான். இனி ஏதேனும் ஈரான் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், வளைகுடா நாடுகளில் அமெரிக்காவிற்கு சொந்தமாக இருக்கும் எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. மேலும், சவுதி அரேபியாவில் எரிபொருள் நிரப்ப தரையிறங்கிய 5 அமெரிக்க விமானங்களை ஈரான் தாக்கியுள்ளது என்று 'The Wall Street' பத்திரிகை தெரிவித்துள்ளது. ஈரானின் இந்தத் தாக்குதல், மிரட்டல் அனைத்துமே கார்க் தீவிற்காக அமெரிக்காவைப் பழி வாங்கும் நடவடிக்கையே.

இதற்கிடையே, அதிகரித்து வரும் பதற்றங்கள் இருந்தபோதிலும், ஈரான் தொடர்ந்து சில நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்து வருகிறது, அதே நேரத்தில் பல வளைகுடா உற்பத்தியாளர்கள் ஈரானின் தாக்குதல்களுக்கு பயந்து ஏற்றுமதியை நிறுத்திவிட்டனர். இந்த போர் பதற்றம் தொடர்ந்தால் இந்திய உட்பட பல நாடுகளில் எரிசக்தி தட்டுப்பாடு மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com