

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 'பரஸ்பர வரி' எனும் வரிப்போருக்கு உலக நாடுகளுக்களில் மட்டுமல்லாமல், தன் சொந்த நாட்டிலேயே அவருக்கு எதிர்ப்பான குரல் எழுமியது. அதனை அடுத்து அமெரிக்க நீதிமன்றத்தில் இதன் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.
அதிகாரத்தைத் தாண்டி வரி விதிப்பு:
நேற்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது அதில், "மக்களின் பாக்கெட்டுகளுக்குள் நுழையும் அதிகாரம் காங்கிரஸிற்கு (அமெரிக்க நாடாளுமன்றம்) மட்டுமே உள்ளது. வரி விதிக்க நிர்வாகிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ட்ரம்ப் தனது அதிகாரத்தைத் தாண்டி வரி விதித்து இருக்கிறார்." என தெரிவித்துள்ளது. ட்ரம்பின் பரஸ்பர வரி விதிப்பால் அமெரிக்காவின் கருவூலத்தில் 133 பில்லியனுக்கும் மேற்பட்ட டாலர்கள் சேர்ந்திருக்கின்றன என தெரியவந்துள்ளது.
"உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம்" - ட்ரம்ப்:
அதிபர் ட்ரம்ப் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை கடுமையாக விமர்சித்தார். ``எனக்கு எதிராகத் தீர்ப்பளித்த நீதிபதிகளைப் பார்த்து வெட்கப்படுகிறேன். நீதிமன்றத்தின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது, இந்தத் தீர்ப்பு தவறானது. இந்த தீர்ப்பு என் முயற்சிகளை முடக்கிவிடாது. எனக்கு இன்னும் பல அதிகாரங்கள் இருக்கிறது." எனத் தெரிவித்தார். மேலும் நியாயமற்ற வர்த்தக விதிமுறைகளை யாரேனும் அமெரிக்காவிற்கு எதிராக பின்பற்றினால், வர்த்தக சட்டம், 1974-ன் கீழ், பிரிவு 301-ல் அதிபரால் வரி விதிக்க முடியும் மற்றும் நாட்டின் பாதுகாப்பு அடிப்படையில், வர்த்தக விரிவாக்குதல் சட்டம், பிரிவு 232-ன் கீழ் வரி விதிக்க முடியும் எனும் தனக்கு சாதகமான இரு சட்ட பிரிவுகளை ட்ரம்பின் அரசு பயன்படுத்த கூடும்.
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்:
இதனை அடுத்து சமீபத்தில் இந்தியா - அமெரிக்கா இடையான வர்த்தக ஒப்பந்தம் குறித்த கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. அதற்கு பதிலளிக்கும் நோக்கில் அதிபர் ட்ரம்ப் "அமெரிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பால் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் இந்தியாவுடன் ஒரு நியாயமான ஒப்பந்தத்தைச் செய்துள்ளோம். பிரதமர் மோடி ஒரு சிறந்த மனிதர், மிகவும் புத்திசாலி. கடந்த காலங்களில் அவர்கள் அதிக லாபம் ஈட்டி வந்தனர், ஆனால் இப்போது நாங்கள் ஒரு மாற்றத்தைச் செய்துள்ளோம். இனி நாங்கள் அவர்களுக்கு வரி செலுத்த மாட்டோம், ஆனால் அவர்கள் எங்களுக்கு வரி செலுத்துவார்கள்" என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் இந்த மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட வர்த்தக அமைப்பு, நீதிமன்ற தீர்ப்பால் பாதிக்கப்படாது என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மார்ச் மாதம்
கையெழுத்து ஆகும் மேலும் ஏப்ரல் மாதம் அமலாகும் என்று மத்திய வர்த்தக மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்த நிலையில் இந்த தீர்ப்பு ஒப்பந்தத்தில் மாற்றம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது என தெரிகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.