வாழத்தக்க நகரங்கள் இவ்வளவு தானா? முதலிடத்தைப் பிடித்த ஆஸ்திரியா தலைநகரம்!!

உலகில் வாழத்தக்க நகரங்கள் பட்டியலில் ஆஸ்திரியா நாட்டின் தலைநகரான வியன்னா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
வாழத்தக்க நகரங்கள் இவ்வளவு தானா? முதலிடத்தைப் பிடித்த ஆஸ்திரியா தலைநகரம்!!
Published on
Updated on
1 min read

எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் வெளியிட்டுள்ள பட்டியலின்படி,  கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த ஆக்லாந்தை பின்னுக்குத் தள்ளி வியன்னா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. ஆக்லாந்து 34-வது இடத்திற்கு சரிந்துள்ளது.

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் மற்றும் சுவிட்சர்லாந்தின் சூரிச் ஆகியவை இரண்டாவது இடத்தில்  உள்ளன. கனடாவின் கல்காரி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.  சுவிட்சர்லாந்தின் ஜெனீவா ஆறாவது இடத்தையும், ஜெர்மனியின் பிராங்பர்ட் ஏழாவது இடத்தையும், நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் ஒன்பதாவது இடத்தையும் பிடித்தன.

போர் காரணமாக உக்ரைன் தலைநகர் கீவ் இதில் தேர்வு செய்யப்படவில்லை. ரஷ்ய நகரங்களான மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரங்கள் மேற்குலகின் தடைகளின் தாக்கம் காரணமாக தரவரிசையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக எகனாமிஸ்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com