வங்கதேசத்தில் வெடிக்கும் வன்முறை..! இந்திய விசா மையம் மூடபட்டது.

டாக்கா முழுவதும் கலவரம் வெடித்ததில், பல இடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ...
sherif usman hadi
sherif usman hadi
Published on
Updated on
1 min read

வங்கதேசத்தின் கடந்த ஆண்டு மாணவர்கள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அந்நாட்டை விட்டு தப்பிவந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அந்த மாணவர் போராட்டத்தில் பல மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர், அவர் வெளியேறிய பிறகும் அவர் மீதான வழக்கு விசாரிக்கப்பட்டு அவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.

இந்த மாணவர் போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்திய ஷெரிஃப் உஸ்மான் ஹாடி, கடந்த  12 -ஆம் தேதி டாக்காவில் சுடப்பட்டு உயிரிழந்தார். இதனால் டாக்கா முழுவதும் கலவரம் வெடித்ததில், பல இடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. தற்கிடையில் இந்திய இளைஞர் ஒருவரை மோசமாக தாக்கி, மரத்தில் கட்டி வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் கடும் பதற்றம் நிலவுகிறது. மேலும், இந்திய துணை தூதர் இல்லம், அலுவலகத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து டாக்காவில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் மூடப்பட்டது.தற்போது வங்கதேசத்தின்  -வது பெரிய நகரமான சிட்டாங்கிலும் இந்திய விசா விண்ணப்ப மையம் நேற்று மூடப்பட்டு உள்ளது.

இந்த சூழலில்தான், இந்தியாவுக்கு எதிராக தவறாக பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு கண்டனம் தெரிவித்து உள்ளது.”திபு சந்திர தாஸ் என்ற  இந்து இளைஞரின் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது, வங்கதேச இடைக்கால அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என இந்திய வெளியுருவத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com