சீனாவில் மேலும் 2 விமான நிலையங்களில் விசா இன்றி தங்கும் நடைமுறை

சீனாவில் மேலும் 2 விமான நிலையங்களில் விசா இன்றி தங்கும் நடைமுறை

Published on

சீனாவில் மேலும் 2 விமான நிலையங்களில் விசா இன்றி தங்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீனா வழியாக செல்லும் பயணிகளுக்கான விசா நடைமுறையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி மற்ற நாட்டுக்கு செல்லும் பயணிகள் சீனாவில் 144 மணி நேரம் அதாவது 6 நாட்கள் வரை சீனாவில் தங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட 54 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயன்பெற்று வருகின்றனர் .தற்போது விசா தளர்வு அளிக்கப்பட்டுள்ள சின்செங் விமான நிலையம், லிஜாங் விமான நிலையம் மற்றும் துறைமுகங்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com