உய்குர் இனமக்கள் மீதான அடக்குமுறை விவகாரத்தில், சீனாவை நம்புவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
சீனாவில் சிறுபான்மையினர்களான உய்குர் இன இஸ்லாமிய மக்கள் மீதான அடக்கு முறைக்கு உலக நாடுகள் கடும் கண்டங்களையும் கவலையையும் தெரிவித்து வருகின்றன. அதோடு பல இஸ்லாமிய நாடுகளும் இதற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் உய்குர் இன மக்கள் மேல் நாங்கள் எந்த அடக்குமுறையும் செய்யவில்லை என்று சீனா பதிலளித்து வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் மவுனம் காப்பது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த இம்ரான் கான், உய்குர் இன மக்கள் மீதான அடக்குமுறை குறித்த விவகாரத்தில் சீனாவின் கூற்றை முற்றிலும் நம்புவதாகவும், சீனா உடனான நெறுங்கிய நட்பின் காரணமாக அதன் கூற்றை ஏற்றுக் கொள்வதாகவும் பதிலளித்துள்ளார். உய்குர் இன மக்கள் மீதான சீனாவின் அட்டூழியங்களுக்கு ஏராளமான சான்றுகள் இருந்தபோதிலும் சீனாவை நம்புவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.