இஸ்தான்புல் குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்கள் யார்?!!

இஸ்தான்புல் குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்கள் யார்?!!
Published on
Updated on
1 min read

தீவிரவாத தாக்குதலாக நாங்கள் கருதுகிறோம்.  துருக்கிய அதிகாரிகள் இந்த பயங்கரவாத செயலை விசாரித்து, அதற்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிப்பார்கள். 

இஸ்தான்புல் குண்டுவெடிப்பும் கைதும்:

ஞாயிற்றுக்கிழமை இஸ்தான்புல்லில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது.  துருக்கியின் இஸ்தான்புல் நகரில் குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

இந்தத் தகவலை துருக்கி உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு தெரிவித்துள்ளார்.  இஸ்தான்புல்லின் இஸ்திக்லால் தெருவில் வெடிகுண்டு வைத்த நபர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.  இந்த சம்பவத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் இது தவிர, 81 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

அதிபரது கருத்து:

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் பயங்கரவாதிகள் இருக்கலாம் என துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் சந்தேகம் தெரிவித்துள்ளார். 

துணை அதிபர் கருத்து:

இது தீவிரவாத தாக்குதலாக நாங்கள் கருதுகிறோம் என்று துருக்கி துணை அதிபர் ஃபுவாட் ஒக்டே கூறியுள்ளார்.  மேலும், துருக்கிய அதிகாரிகள் இந்த பயங்கரவாத செயலை விசாரித்து, அதற்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com