இந்திய கைதிகளை விடுதலை செய்யுமா பாகிஸ்தான் அரசாங்கம்?!!! இந்தியா வைத்த கோரிக்கை என்ன?!!

இந்திய கைதிகளை விடுதலை செய்யுமா பாகிஸ்தான் அரசாங்கம்?!!! இந்தியா வைத்த கோரிக்கை என்ன?!!

இந்திய குடிமக்கள் மற்றும் மீனவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்த கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
Published on

இந்தியாவும் பாகிஸ்தானும் அந்தந்த சிறைகளில் உள்ள கைதிகள் மற்றும் மீனவர்களின் பட்டியலை ஒருவருக்கொருவர் ஒப்படைத்தன.  339 பாகிஸ்தானியர்களும், 95 மீனவர்களும் இந்தியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இந்த கைதிகளின் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.   இதனுடன், இந்த கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க நடவடிக்கை எடுக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒப்பந்தம்:

ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளும் சிவில் கைதிகள் மற்றும் மீனவர்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் தூதரக வழிகளில் ஒருவருக்கொருவர் ஒப்படைத்துக்கொள்வது வழக்கமாக உள்ளது.

இந்திய கைதிகள்:

பாகிஸ்தான் சமர்ப்பித்த பட்டியலின்படி, 51 இந்திய கைதிகளும், 654 மீனவர்களும் 
பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று வெளியுறவு  துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா கோரிக்கை:

இவர்களில் 631 இந்திய மீனவர்களும், இரண்டு இந்திய கைதிகளும் தண்டனையை நிறைவு செய்துள்ளதாக வெளியுறவு துறை அமைச்சகம் கூறியுள்ளது.  இவ்வாறான நிலையில் இவர்களை விரைவாக விடுவிக்க வேண்டுமென பாகிஸ்தானிடம் இந்தியா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com