அரசை எதிர்த்து.... வெற்றி பெறுமா மாணவர்கள் போராட்டம்?!!

அரசை எதிர்த்து.... வெற்றி பெறுமா மாணவர்கள் போராட்டம்?!!
Published on
Updated on
1 min read

யாழ்ப்பாணத்தில் தேசிய சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களினால் எதிர்ப்பு போராட்டம் ஒன்று திட்டமிடப்பட்டிருந்தது.

மாணவர்கள் போராட்டம்:

பல்கலை கழகத்திற்கு முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து நடத்தினர்.  போராட்டத்திற்கு முன்னதாக பல்கலை வளாகத்தினுள் உள்ள பிரதான கொடி கம்பத்தில் கறுப்பு கொடியினை மாணவர்கள் ஏற்றி மாணவர்கள் எதிர்ப்பையும் தெரிவித்தனர்.

எதற்காக போராட்டம்?:

போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் பொருளாதார பின்னடைவு நேரத்திலும் பெருந்தொகையான பண செலவில் இரண்டாவது தடவையாக சுதந்திர தினத்தினை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏன்? என பெருங் குரலெழுப்பி போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.

கைது:

சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்திய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட ஏழு பேர் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com