ஆண்டுக்கு ரூ.27 கோடி சம்பளம்! உலகிலேயே அதிகம் வாங்கும் தலைவர் யார்? Top 5 லிஸ்ட் இதோ!

தனியார் துறைகளில் கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் CEO போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரத் தயங்கக் கூடாது என்பதால் இந்த ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அரசு கூறியுள்ளது.
ஆண்டுக்கு ரூ.27 கோடி சம்பளம்! உலகிலேயே அதிகம் வாங்கும் தலைவர் யார்? Top 5 லிஸ்ட் இதோ!
ஆண்டுக்கு ரூ.27 கோடி சம்பளம்! உலகிலேயே அதிகம் வாங்கும் தலைவர் யார்? Top 5 லிஸ்ட் இதோ!
Published on
Updated on
2 min read

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் அவரது சம்பளத்தை 64% உயர்த்தி நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது உலக அரங்கில் பேசுபொருளாக எழுந்துள்ளது.

ஏற்கெனவே 2.2 மில்லியன் சிங்கப்பூர் டாலர்களாக இருந்த பிரதமரின் சம்பளம், இந்தத் திருத்தத்துக்குப் பிறகு 3.6 மில்லியனாக உயர்கிறது. இந்திய மதிப்பில் ஆண்டுக்கு ரூ.27 கோடி. இது அமெரிக்க அதிபரின் சம்பளத்தை விட அதிகம்.

இத்துடன் துணைப் பிரதமர் சம்பளம், Sg$ 1.87 மில்லியனில் இருந்து Sg$ 3.06 மில்லியனாக உயர்கிறது.

அமைச்சர்களின் சம்பளம், பொறுப்பைப் பொறுத்து Sg$ 1.80 மில்லியன் முதல் Sg$ 2.88 மில்லியன் வரை இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

Lawrence Wong
Lawrence WongPMO Singapore

இந்திய பிரதமர் மோடியின் ஆண்டு சம்பளம் 19 முதல் 20 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்படுகிறது. இத்துடன் பயணம், பாதுகாப்பு, இருப்பிடத்துக்கான படிகள் வழங்கப்படும்.

ஆச்சரியப்படும் வகையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆண்டுக்கு சுமார் 21 லட்சம் ரூபாயும், ரஷ்ய அதிபர் புதின் ஆண்டுக்கு 1.32 கோடி சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது.

சம்பள உயர்வுக்கு சிங்கப்பூர் அரசு சொல்லும் காரணம் என்ன?

பொதுவாக, அரசியல் தலைவர்கள் தங்கள் வருமானத்தை உயர்த்திக்கொள்வது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தும். சிங்கப்பூர் பிரதமரின் இந்த சம்பள உயர்வும் மக்களிடத்தில் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

ஆனால் ஆளும் தரப்பு, “நாட்டில் லஞ்சத்தை ஒழிக்கவும், மிகச் சிறந்த திறமைசாலிகளை (Talent) அரசாங்கத்திற்குள் இழுக்கவும் வேண்டுமானால், அவர்களுக்குத் தனியார் துறைகளுக்கு ஈடான தகுதியான சம்பளத்தைக் கொடுத்துதான் ஆகவேண்டும்!” என வாதிடுகிறது.

தனியார் துறைகளில் கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் CEO போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரத் தயங்கக் கூடாது என்பதால் இந்த உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சம்பள உயர்வால் மக்கள் மத்தியில் எழும் அதிருப்தியை உணர்ந்த பிரதமர் லாரன்ஸ் வோங், “எனக்கு உயர்த்தப்படும் இந்தக் கூடுதல் சம்பளத் தொகை முழுவதையும், எனது பதவிக் காலம் முழுவதும் நற்பணிகளுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் தானமாகக் கொடுத்துவிடுவேன்!” என அறிவித்துள்ளார்.

அத்துடன், இந்தச் சம்பள உயர்வு உடனடியாக அனைவருக்கும் முழுமையாக அமலுக்கு வராது என்றும், அக்டோபர் 15 முதல் அவர்களின் செயல்பாடுகளைப் பொறுத்து (Performance-based) அதிகபட்சமாக 9 சதவீதம் வரை மட்டுமே முதற்கட்டமாக உயர்த்தப்படும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

டாப் 5 அதிக சம்பளம் பெறும் தலைவர்கள் யார்?

சிங்கப்பூர் பிரதமரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ஹாங்காங் ஆட்சியாளர் (Chief Executive) ஆண்டுக்கு ரூ.6,83,29,877 பெறுகிறார்.

சுவிட்சர்லாந்து அதிபர் ரூ.5.76 கோடியும், ஆஸ்திரியா அதிபர் ரூ.4.10 கோடியும் பெறுகின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சம்பளம் இந்திய மதிப்பில் ரூ.3.80 கோடி.

ஆண்டுக்கு ரூ.27 கோடி சம்பளம்! உலகிலேயே அதிகம் வாங்கும் தலைவர் யார்? Top 5 லிஸ்ட் இதோ!
ஆபாச படங்களில் அரசுக்கு $25 மில்லியன் வருமானம்! போரில் வெல்ல உக்ரைன் எடுத்த முடிவு!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com