``ஒருவாரத்துக்கு தேவையான உணவை வீட்டில் வைத்திருங்கள்.." வருகிறதா 'மூன்றாம் உலகப் போர்'? உக்ரைன் - ரஷ்யா மோதல்.. மேற்குலக அரசுகள் எச்சரிக்கை!

இராணுவத் தளங்கள், குறைந்தபட்சம் 90 நாட்களுக்கு வெளிப்புற தொடர்பு இல்லாமல் தங்களின் அத்தியாவசியச் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பென்டகன் வலியுறுத்தி வருகிறது.
Is World War 3 Coming? Western Governments Urge Citizens to Stockpile Food Amid Russia-Ukraine Tensions
``ஒருவாரத்துக்கு தேவையான உணவை வீட்டில் வைத்திருங்கள்.." வருகிறதா 'மூன்றாம் உலகப் போர்'? உக்ரைன் - ரஷ்யா மோதல்.. மேற்குலக அரசுகள் எச்சரிக்கை! AI Generated
Published on: 
Updated on: 
2 min read

3ம் உலகப் போருக்கு தயாராக்கிறதா மேற்குலகம்? அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் ஐரோப்பியா நாடுகள், அவசரகாலத்துக்கு தயாராக இருப்பதை மக்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

பிரிட்டன், வீடுகளில் அத்தியாவசியப் பொருட்களை மூன்று நாட்களுக்கு இருப்பு வைக்குமாறு பொதுமக்களுக்கு வலியுறுத்தும் புதிய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இதனால் அடுத்து மிகப் பெரிய போரினை எதிர்பார்ப்பதைத் தவிர்க்க முடிவதில்லை.

போரின் தக்கங்களான இராணுவ மோதல், இணையவழித் தாக்குதல்கள், உள்கட்டமைப்புகளை நாசப்படுத்துதல், இயற்கை பேரழிவுகள் மற்றும் நீண்டகால மின்வெட்டு போன்றவை குறித்து அரசுகள் மக்களை எச்சரிக்கின்றன. ரஷ்யா உக்ரைன் போர் எப்போது வேண்டுமானாலும் பரந்த மோதலாகா மாறலாம் என்பதால் ஐரோப்பா முழுவதும் தேசிய பாதுகாப்பு குறித்த கவலை எழுந்துள்ளது.

"ராணுவ தளங்கள் வெளிப்புற உதவியின்றி 90 நாட்களுக்கு தாக்குப்பிடிக்க வேண்டும்" - பென்டகன், அமெரிக்கா

ஃபார்ச்சூன் பத்திரிகையின் அறிக்கைபடி, அமெரிக்காவின் பிரதான நிலப்பரப்பில் உள்ள முக்கிய இராணுவத் தளங்கள், குறைந்தபட்சம் 90 நாட்களுக்கு வெளிப்புற தொடர்பு இல்லாமல் தங்களின் அத்தியாவசியச் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பென்டகன் வலியுறுத்தி வருகிறது.

ஃபோர்ட்ரெஸ் (FORTRESS) என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம், மின்சார விநியோகம், உள்கட்டமைப்பு அல்லது விநியோகச் சங்கிலிகள் தடைபட்டால் கூட, தளங்கள் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்துகிறது. நீண்டகால போரை எதிர்பார்த்தே இந்த முடிவுகள் எடுக்கப்படுவதாக பார்க்கப்படுகிறது.

இதற்காக கூறப்பட்டுள்ள நடவடிக்கைகளில், கடுமையான வானிலை, இணையவழித் தாக்குதல்கள் அல்லது பாகங்களின் செயலிழப்புகளைக் கடந்தும் செயல்படக் கூடிய மின் அமைப்புகள், எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் இருப்புக்கள், மற்றும் மாற்று விநியோக ஏற்பாடுகள் ஆகியவை அடங்கும்.

இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவும் உள்கட்டமைப்புகள் பாதிப்புக்கு உள்ளானாலும், தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.

போரில் மின்சாரம், தகவல் தொடர்பு, போக்குவரத்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் பாதிக்கக்கூடும். எனவே, இயல்பான சேவைகள் தடைபட்டால், முக்கிய செயல்பாடுகளை எவ்வாறு தொடர்ந்து இயங்க வைப்பது என்று இராணுவ நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

இது வழக்கமான ஆய்வாக தெரிந்தாலும் உலகளாவிய புவிசார் அரசியல் சூழ்நிலைகள் இது ஒரு பரந்த தாக்குதலுக்கான தயாரிப்பா என்ற கேள்வியை எழுப்புகின்றன.

மக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கிய பிரிட்டன், ஜப்பான்

பிரிட்டன் அதன் மக்களுக்கு அளித்துள்ள அறிவிப்பில் குடிநீர், கெட்டுப்போகாத உணவு, ஒரு டார்ச், பேட்டரிகள், முதலுதவிப் பெட்டி, ரொக்க பணம், பவர் பேங்க் மற்றும் மின்கலத்தால் இயங்கும் அல்லது சாவி கொடுக்கும் வானொலி ஆகியவற்றை கையிருப்பாகக் கொள்ள அறிவுறுத்தியிருக்கிறது.

வழக்கமான இராணுவத் தாக்குதல் இல்லாமலேயே, டிஜிட்டல் அமைப்புகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் அன்றாட வாழ்க்கையைச் சீர்குலைக்கக்கூடும் என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

உக்ரைன் - ரஷ்யா போரின் விளைவாக தங்களது நாட்டின் பகுதியும் பாதிப்பு உள்ளாகலாம் என இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அப்படியான தாக்குதல்கள் நடந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டால் மக்கள் எல்லா தேவைகளுக்கும் உதவியை நாடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜப்பானும் தங்களது மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறது. ஆனால் அது வேறு காரணங்களுக்காக!

ஜப்பானின் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கோஷி ஹோசோனோ, நாட்டின் புதிய பேரிடர் மேலாண்மை முகமை நவம்பர் 2-ஆம் தேதி செயல்படத் தொடங்கிய பிறகு பேரிடர் குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்படும் எனக் கூறியிருக்கிறார். சமீப காலங்களில் ஜப்பானில் நில நடுக்கம் ஏற்படுவது அதிகரித்திருக்கிறது. சுனாமி ஏற்படும் அபாயமும் உள்ளது. பேரிடர் ஏற்பட்டால் மக்கள் 3 நாட்களுக்கான தேவைகளை வீட்டில் இருப்பு வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மூன்றாம் உலகப் போருக்கான அறிகுறியா?

பிப்ரவரி 2022-ல் ரஷ்யா உக்ரைன் மீது தனது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, பின்லாந்து, ஸ்வீடன், போலந்து, எஸ்டோனியா, லாட்வியா மற்றும் லிதுவேனியா உள்ளிட்ட நாடுகள் உள்ளூர் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளன. தங்குமிடங்களைப் புதுப்பித்தல், முக்கிய உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், வெளியேற்றத் திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் அவசரநிலைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக கற்பித்து வருகின்றனர்.

ஒரு ஐரோப்பிய நாட்டில் நீண்ட நாட்கள் போர் நடைபெறுவது இரண்டாம் உலகப் போருக்கு பிறகு இப்போதுதான். இதிலிருந்து ஐரோப்பிய நாடுகள் பாடம் கற்றுள்ளன. ஒரு நீடித்த மோதல், பொதுமக்களின் உள்கட்டமைப்பு, விநியோகச் சங்கிலிகள் மற்றும் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பதை ஐரோப்பிய அரசாங்கங்கள் கண்டறிந்துள்ளன.

ரஷ்யாவுக்கு அருகில் உள்ள நாடுகள், ஒரு பரந்த மோதலுக்கான சாத்தியக்கூறுக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள சில காரணங்களை வைத்திருக்கின்றன. நேட்டோ உறுப்பினர்களாக இருக்கும் இவை தான் ரஷியாவால் தாக்கப்படுவாதற்கான அதிகபட்ச சாத்தியங்களைக் கொண்டுள்ளன. இந்த நாடுகளில் அரசின் எச்சரிக்கை மிக மிக தீவிரமானதாகப் பார்க்கப்படுகிறது.

ரஷ்யா - உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான எத்தனையோ முயற்சிகள் தோல்வியில் முடிந்துவிட்டன. அரசியல் சூழலின் நிச்சயமற்ற இந்த சூழலில் நாடுகள் 'வரும் முன் காப்பாதே' என்ற அடிப்படையில் இந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இதை வைத்தே பரந்துபட்ட அளவில் போர் நடக்க உள்ளதாகக் கூற முடியாது என்பதே நிதர்சனம்.

Is World War 3 Coming? Western Governments Urge Citizens to Stockpile Food Amid Russia-Ukraine Tensions
ரூ.5000 கோடி மோசடி.. CM விஜய் உடன் புகைப்படம்.. தவெக தொடர்பு? "செய்தி நிறுவனத்தின் இயக்குநர் இல்லை!" - யார் இந்த பிரேம் குமார்?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்