ஜெத்தாவில் இருந்து சவுதி ஏர்லைன்ஸ் ஆனது கோலாலம்பூருக்கு புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது அப்பொழுது விமானத்தில் திடீரென்று பெண் பயணி ஒருவருக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு அவசரகால மருத்துவம் பார்ப்பதற்காக அருகில் இருந்த சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறிக்கை விமானி தகவல் ஒன்றை அளித்தார், இந்த நிலையில் சென்னை விமான வழியை கட்டுப்பாட்டு அறையில் இருந்து உடனடியாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்குமாறு அறிவுறுத்தினர் இதனை அடுத்து சென்னை விமான நிலையத்திற்கு வந்து தரையிறங்கிய விமானத்தில் இருந்து உடல்நிலை சரியில்லாத அந்த பயணியை உடனடியாக வெளியே அழைத்து வந்து அவருக்கு மருத்துவர்கள் முதல் உதவியை அளித்து வந்தன இதனால் விமானம் சென்னை விமான நிலையத்தில் உள்ள பே என் 45 ல் நிறுத்தி வைக்கப்பட்டு விமானத்தில் இருந்த பயணிகளுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது பயனியின் உடல்நிலை முன்னேற்றம் குறித்து தகவல் வெளியான பின்பு விமானம் புறப்படும் என்று தெரியப்படுத்தி உள்ளனர்.