ரூ. 150 க்கு விற்பனை ஆகும் ரோஜா பூ...

கொடைரோடு ரோஜா மலர் சந்தையில் ஒரு கிலோ ரோஜா பூ ரூ.70க்கு விற்பனை ஆகி வருவது பூக்கடைக்காரர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ரூ. 150 க்கு விற்பனை ஆகும் ரோஜா பூ...
Published on
Updated on
1 min read

திண்டுக்கல் | கொடைரோடு தோட்டக்கலைத்துறை ரோஜா மலர் சந்தையில் ஒரு கிலோ ரோஜாப்பூ ரூபாய் 70 திற்கு விற்பனையானது. அம்மையநாயக்கனூர், ராஜதானி கோட்டை, சடையாண்டிபுரம், ராமராஜபுரம், கொழிஞ்சிப்பட்டி, புதூர்  உள்ளிட்ட பகுதிகளில் ரோஜா மலர் சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது வெயில் தாக்கம் அதிகரித்து உள்ள நிலையில் ரோஜாப்பூ வரத்து குறைந்த அளவே காணப்படுகிறது. இருப்பினும் இன்று மலர் சந்தையில் ஒரு கிலோ ரோஜாப்பூ ரூபாய் 40 முதல் ரூபாய் 70 வரை விற்பனையானது. ஆலயங்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் மருத்துவ குணம் கொண்ட பன்னீர் ரோஜா பூ ரூபாய் 100 முதல் ரூபாய் 150 வரை விற்பனையானது.

வரத்து குறைந்த போதிலும் போதிய விலை கிடைக்கவில்லை என்ன ரோஜாபூ விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com