கூட்டுறவுக்கடையில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை..!

கூட்டுறவுக்கடையில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை..!

தமிழ்நாட்டில் தக்காளியின் விலை உச்சத்தை தொடர்ச்சியாக தொட்டு வரும் நிலையில் சென்னையில் கூட்டுறவு கடைகளில் தக்காளி கிலோ 60 ருபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அண்டை மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது. இதனால் அரசு கூட்டுறவு கடைகளிலும், நியாய விலைக்கடைகளிலும் தக்காளியை மானிய விலைக்கு விற்பனை செய்து வருகிறது.

அந்த வகையில் தேனாம்பேட்டையிலுள்ள காமதேனு கூட்டுறவு கடையில் தக்காளி ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Sale of tomatoes in ration shops - Interview with Minister Periyakaruppan |  ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை -அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி

நபர் ஒருவருக்கு 1 கிலோ மட்டுமே விற்பனை செய்யப்படுவதால் காலை முதலே நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து தக்காளியை வாங்கி சென்றனர். 

இதையும் படிக்க   | சைக்கிள் ஓட்டி வந்த 50 பேருக்கு இலவச தக்காளி!விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடந்த சுவாரஸ்யம்!