அந்நிய செலாவணி கையிருப்பு ..! 329 மில்லியன் டாலர் குறைந்தது...!!

அந்நிய செலாவணி கையிருப்பு ..! 329 மில்லியன் டாலர் குறைந்தது...!!

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 329 மில்லியன் டாலர் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
  
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 329 மில்லியன் அமெரிக்க டாலர் குறைந்துள்ளது. இந்நிலையில்  தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பானது 578.45 பில்லியன் டாலராக உள்ளது. கடந்த நிதி ஆண்டின் தொடக்கத்தில் ஒட்டுமொத்த அந்நிய செலாவணி இருப்பு சுமார் 633 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் சமீபத்திய தலையீடு,  தங்கம் கையிருப்பு சரிவடைந்தது மற்றும் இறக்குமதி  பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றின் காரணமாக பெரும்பாலும் இந்த சரிவு ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.