மீன் அங்காடிக்கு ஆட்சியர் விதித்த தடை உத்தரவு.... இன்று முதல் நடைமுறைக்கு வந்தது!

மீன் அங்காடிக்கு ஆட்சியர் விதித்த தடை உத்தரவு....  இன்று முதல் நடைமுறைக்கு வந்தது!

மீன் அங்காடிக்கு ஆட்சியர் விதித்த தடை உத்தரவு.....

இன்று முதல் நடைமுறைக்கு வந்தது!

புதுச்சேரி மீன் அங்காடி


 புதுச்சேரி நேரு வீதி மகாத்மா காந்தி சாலை சந்திப்பில் குபேர் மீன் அங்காடி அமைந்துள்ளது. நாள்தோறும் மீன் பிடித்துறைமுகத்தில் இருந்து இங்கு கொண்டு வரும் மீன்கள் ஏலம் விடப்படுகின்றன.


மாவட்ட ஆட்சியரின் தடை உத்தரவு

இந்நிலையில் வியாபாரிகள் மீன் கழிவுகளை சாலையிலேயேக் கொட்டி செல்வதால் நேரு வீதியில் துர்நாற்றம் வீசுவதாகவும், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, நேரு வீதியில் மீன்களை ஏலம் விடக்கூடாது, மொத்த வியாபாரம் செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 

சாலையில் திரண்ட மீனவப் பெண்கள் 

 மாவட்ட ஆட்சியர் மீன் விற்பனைக்குத் தடை விதித்ததை அறிந்தப் பெண்கள் சாலையில் திரண்டுப் போராட்டம் நடத்தினர். ஆட்சியரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று சமாதானம் கூறி போராட்டம் செய்த பெண்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இந்நிலையில் பேச்சு வார்த்தைகள் ஏதுமின்றி தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமலுக்கு வந்த தடை உத்தரவு

இந்த தடை உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, மீன்கள் இறக்குமதி செய்ய வந்த வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் மீன் அங்காடி மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com