கொரோனாவால் அம்பானிக்கே இந்த நிலையா.? அதிர்ச்சியில் ரிலையன்ஸ் ஊழியர்கள்.! 

கொரோனாவால் அம்பானிக்கே இந்த நிலையா.? அதிர்ச்சியில் ரிலையன்ஸ் ஊழியர்கள்.! 

கொரோனா பாதிப்பு காரணமாக ரிலையன்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது நிலையில் தனது சம்பளத்தை முழுமையாக குறைத்துள்ளார் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி. 

கொரோனா ஊரடங்கால் தொழிற்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை இரண்டு வருடங்களாக தொடர்ந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, பாலிமர், டெலிகாம், ரீடைல் எனப் பல துறையில் இயங்கி வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் லாபமும் பெரிய அளவில் குறைத்துள்ளது.

ஆனால் அதே நேரம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஜியோ மற்றும் ரீடைல் பங்குகளை விற்பனை செய்து  சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்த்த காரணத்தால் அதன் பங்கு மதிப்பு பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து. இதன் காரணமாக உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற்றார் அம்பானி. 

ஆனாலும் கொரோனா பாதிப்பு காரணமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திலிருந்து தான் சம்பளமாக வாங்கிய 15 கோடி ஆண்டு ஊதியத்தை துறந்துள்ளார் அம்பானி. இதன் காரணமாக சம்பளம் வாங்காமலே அவர் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியப்போகிறார். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com