படிப்படியாக குறைந்து வரும் தக்காளி விலை...! மக்கள் மகிழ்ச்சி..!

படிப்படியாக குறைந்து வரும் தக்காளி விலை...! மக்கள் மகிழ்ச்சி..!

தாராபுரத்தில் 2 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை ஆவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வரத்து குறைவு காரணமாக தக்களியின் விலை கிலோ 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ளூர் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், தக்காளியின் விலை படிப்படியாக குறைந்துள்ளது.

இதனால் முதல் ரகத் தக்காளி கிலோ 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளிச் செடியின் கடைசி அறுவடையாக பறிக்கப்படும் தக்காளிகள் அளவில் சிறியதாக இருப்பதால் அந்த வகை குட்டித் தக்காளிகள், 2 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com