இந்திய எதிர்காலம் அதானி குழுமத்தால் தடுக்கப்படுவதாகக் கூறி, அவரின் பதில் அறிக்கைக்கு ஹிண்டர்பர்க் ஆய்வு நிறுவனம் பதிலடி கொடுத்துள்ளது.
பங்குச்சந்தையில் தனது பங்கை உயர்த்த ஏராளமான மோசடிகளில் ஈடுபட்டதாக, அதானி குழுமத்திற்கு 88 கேள்விகளை ஹிண்டர்பெர்க் எழுப்பியது. இது பொய்யான குற்றச்சாட்டு எனக்கூறி, இந்திய வல்லரசுடன் தானும் முன்னேறுவதாக அதானி பதில் அறிக்கை வெளியிட்டார்.
மேலும் படிக்க | முதலிடத்திலிருந்து தள்ளப்பட்ட எலான் மஸ்க்... காரணம் என்ன?!!!
இந்நிலையில் கேள்விகளில் இருந்து முற்றிலும் விலகி, துடிப்பான ஜனநாயாக நாடான இந்தியாவின் புகழுக்குள் தன்னை அதானி மூடி மறைப்பதாக ஹிண்டர்ன்பர்க் தெரிவித்துள்ளது.
தேசத்தை திட்டமிட்டு சூறையாடும் முயற்சிகளை கைவிட்டு, கேள்விகளுக்கு உரியபதில் அளிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.
சமீபத்தில், அதானி குழுமம் சுமார் 50 பில்லியன் டாலர்கள் அதாவது சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், ஹிண்டர்பர்க் கொடுத்த இந்த பதிலடி காரணமாக மேலும் 16 பில்லியன் டாலர்கள், அதாவது சுமார் 66 பில்லியன் டாலர்கள் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.