ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் உயர்ந்த ஓலா ,ஊபரின் கட்டணம்..!

ஆட்டோ  ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் உயர்ந்த   ஓலா ,ஊபரின் கட்டணம்..!
Published on
Updated on
1 min read

கார் மற்றும் ஆட்டோ  ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் ஓலா ,ஊபரின் கட்டணங்கள் கணிசமாக உயர்ந்துள்ளது. 

வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி ஓலா, ஊபர் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆன்லைன் செயலிகளின் வாகன கட்டனங்களின் விலை உயர்ந்துள்ளது. வழக்கமாக ஓலாவை விட ஊபர் கட்டணம் குறைவாக இருக்கும் ஆனால் இன்று ஊபர் வாகன ஓட்டுநர்கள் எண்ணிக்கை குறைந்ததால் ஓலாவை விட இரு மடங்கு வரை ஊபர் கார் கட்டணம் உயர்ந்துள்ளது. 

ஓலா, ஊபர் செயலி கட்டணங்களை அரசு முறைப்படுத்த வேண்டும் எனவும், பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் கோரிக்கை வைக்கப்பட்டது. 

மேலும்,  ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்தது போல், கால்டாக்சிக்களுக்கும் அரசே கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும்  காலாவாதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்தியும்  சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவதை தவிர தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் வாடகை கார் மற்றும் ஆட்டோ குழு வாடகை கடுமையாக உயர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. 

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் தாம்பரம் இடையே தற்போதைய ஒலா , ஊபர் , பாஸ்ட்ராக் கட்டண விகிதம்,...

ஒலா செயலி கட்டணம் விபரம்: 

ஆட்டோ - 256 ரூபாய் . என்றும்  கார் - 515 முதல் 600 ரூபாய் எனவும் உள்ளது.

ஊபர் செயலி கட்டணம் விபரம்:

ஆட்டோ - 433 ரூபாய். என்றும்   கார் - 1200 முதல் 1300 ரூபாய். எனவும் உள்ளது.

ஃபாஸ்டேக் செயலி கட்டணம் விபரம்: 

ஆட்டோ - 500 ரூபாய்.  என்றும்  கார் - 770 ரூபாய் முதல் 1250 ரூபாய் வரை.எனவும் உள்ளது.

வழக்கமாக ஒலாவை விட ஊபர் கட்டணம் குறைவாக இருக்கும் , ஆனால் இன்று ஊபர் வாகன ஓட்டுநர்கள் எண்ணிக்கை குறைந்ததால் ஒலாவை விட இரு மடங்கு வரை ஊபர் கார் கட்டணம் உயர்ந்துள்ளது , ஃபாஸ்ட்ராக் செயலி கட்டணம் பெரியளவில் மாறுதல் இன்றி வழக்கமாக வசூலிக்கும் கட்டணத்தையே வசூலித்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com