விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்..! அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்..!

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்..! அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்..!

Published on

ஆம்னி பேருந்துக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

தொடர் விடுமுறையை ஒட்டி சொந்த ஊருக்கு சென்ற பொதுமக்கள், விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் நிலையில், ஆம்னி பேருந்துக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதால் அவதி அடைந்தனர்.

சென்னை, பெங்களூரு செல்ல பொதுமக்கள் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்களின் வருகையை அறிந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தியதால் பொதுமக்கள், அரசு பேருந்தை நோக்கி படையெடுத்தனர்.

அதே போல், மதுரையில் இருந்து சென்னை செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளில் இரண்டு மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். தொடர் விடுமுறையை யொட்டி சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் மீண்டும் திரும்பும் வகையில் மதுரையிலிருந்து சென்னைக்கு 90 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது.

இந்நிலையில், அங்கிருந்து சென்னைக்கு செல்லும் ஆம்னி பேருந்துக்களில் இரு மடங்கு கூடுதலாக கண்டனம் வசூலிக்கப்பட்டதால்  மக்கள் கடும் வேதனை அடைந்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com