குறைக்கப்பட்ட தங்கத்தின் இறக்குமதி.... தங்கத்தின் விலை அதிகரிப்பு?!!

குறைக்கப்பட்ட தங்கத்தின் இறக்குமதி.... தங்கத்தின் விலை அதிகரிப்பு?!!

திருமண சீசனில் தங்கம் வாங்குவதற்குவதற்கான வாய்ப்பு அதிகம் என வியாபாரிகள் கூறுகின்றனர்.  இதுபோன்ற சூழ்நிலையில், வரும் மாதங்களில் தங்கத்தின் தேவை அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை உயர்வு காரணமாகவும் தேவையின்மை காரணமாகவும் 2023 ஜனவரியில் கடந்த 32 மாதங்களில் இல்லாத அளவுக்கு தங்கம் இறக்குமதி 76 சதவீதம் குறைந்துள்ளது.  இறக்குமதியில் ஏற்பட்டுள்ள இந்த இந்த சரிவு நாட்டின் வர்த்தகத்தில் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட தகவலின் படி, இந்த ஆண்டு ஜனவரியில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கம் 11 டன் மட்டுமே.  அதுவே கடந்த ஆண்டு ஜனவரியில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கம் 45 டன் ஆகும்.  அதாவது இறக்குமதி கடந்த ஆண்டை விட 4 மடங்கு குறைந்துள்ளது.

தங்கத்தின் இறக்குமதி குறைந்துள்ளதால் தங்கத்தின் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால் மக்கள் தங்கம் வாங்கும் திறன் குறையும் வாய்ப்புமுள்ளது.  இருப்பினும் இனி வரும் மாதங்களில் திருமண சீசன் வர இருப்பதால் தங்கம் அதிக அளவில் விற்கப்பட்ட வாய்ப்புள்ளது என வியாபாரிகள் கூறியுள்ளனர். இதனால் இனிவரும் மாதங்களில் தங்கத்தின் இறக்குமதி அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com