திண்டுக்கலில் ஆடிமாத தள்ளுபடி விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.
சமீப காலமாக, தக்காளியின் விலை 120 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இவ்வாறிருக்க, தக்காளி கடையில் பொது மக்களையும், வாடிக்கையாளர்களும் கவரும் விதமாக ஆடி மாத அதிரடி தள்ளுபடியாக தக்காளி விற்கப்படும் என்ற அறிவிப்பால் தக்காளி வாங்க பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
திண்டுக்கல் நகர் மத்தியில் மாநகராட்சிக்கு சொந்தமான காந்தி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் உள்ளூர் மற்றும் வெளியூர் காய்கறிகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுவதால் திண்டுக்கல் நகர் பகுதி மற்றும் வண்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மட்டும் பொதுமக்கள் காய்கறி விற்பனைக்கு வாங்கி செல்வது வழக்கம்.
இந்த காந்தி காய்கறி மார்க்கெட்டில் ஏ. எஸ். டி என்ற மொத்த தக்காளி வியாபார கடையை சந்தோஷ் என்பவர் 20 ஆண்டு காலங்களாக நடத்தி வருகிறார். தற்பொழுது ஆந்திரா, கர்நாடகா, ஓசூர் மழை காரணத்தினாலும் மற்றும் தமிழகத்தில் போதிய தக்காளிகள் இல்லாத காரணத்தினால் ஒரு மாத காலமாக தற்காலியின் விலை 120 முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில் சென்ற வாரம் சந்தோஷ் என்பவர் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக 5 டன் தக்காளிகளை 60 ரூபாய்க்கு விற்பனை செய்தார்.
ஆடி மாதம் என்றாலே நகைகளுக்கு தள்ளுபடி , துணிக்கடைகளில் தள்ளுபடி என்று தான் கேள்விப்பட்டிருப்போம். திண்டுக்கலில் முதல்முறையாக ஆடித்தள்ளுபடியாக தக்காளி ஒரு கிலோ ரூபாய் 60 க்கு விற்பனையாகிறது.
அதே போல் இன்று தக்காளி ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்பனையாகி வரும் நிலையில் 8 டன் தக்காளிகளை மொத்த வியாபாரம் செய்யாமல் ஒரு நபருக்கு இரண்டு கிலோ வீதம் தக்காளிகளை ஆடி மாத தள்ளுபடியாக குறைந்த விலைக்கு விற்பனை செய்தார்.
மேலும் அவர் கூறுகையில்:- தக்காளி விலை சராசரியாக 50 ரூபாய்க்கு கீழ் குறைந்து விற்பனையாகும் வரை ஆடி மாதத்தில் வாரம் ஒரு முறை பொது மக்களுக்காக 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும், எனவே, பொதுமக்களும் வாடிக்கையாளர்களும் நாளை 5 மணியிலிருந்து நீண்ட வரிசையில் நின்று தக்காளிகளை வாங்கி செல்கின்றனர்.
தக்காளி விலை சராசரி நிலைக்கு வரும் வரை இந்த விற்பனையானது வாரம் ஒரு முறை விற்கப்படும் என்ற அறிவிப்பால் பொதுமக்களும் வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சியுடன் வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர் .
இதையும் படிக்க | முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்; பொறுப்புகளை வரையறுத்து அரசாணை!