பாஜகவுக்கு முற்றும் நெருக்கடி!!!மும்முனைத் தாக்குதலை சமாளிப்பாரா மோடி!!!

பாஜகவுக்கு முற்றும் நெருக்கடி!!!மும்முனைத் தாக்குதலை சமாளிப்பாரா மோடி!!!

ராகுல் காந்தியின் யாத்திரை:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி, கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்ரா எனும் இந்திய ஒற்றுமை பயணத்தை பாத யாத்திரையாக தொடங்கியுள்ளார். பொருளாதாரம், அரசியல், சமூகம் என அனைத்து வகையிலும் பிளவுபட்டுள்ள இந்தியாவை ஒன்றிணைக்க இந்த பாதயாத்திரை நடத்துவதாக காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சி கடந்த சில வருடங்களாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. மேலும் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர். சமீபத்தில் கட்சியின் மிக முத்த தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத், ராகுல் காந்தியின் செயல்பாடுகள் சரி இல்லை எனக் கூறி கட்சியில் இருந்து விலகினார். காங்கிரஸ் தனது பலத்தை இழந்து வருவதாக கூறப்பட்டது. இழந்த தனது பலத்தை மீண்டும் அடைய ராகுல் காந்தியின் இந்த பயணம் கை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் கட்சியினரிடம் எழுந்துள்ளது.

நிதிஷ் குமாரின் டெல்லி பயணம்:

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் தலைவர்களைச் சந்திக்க மற்ற மாநிலங்களுக்குச் செல்லத் தொடங்குவதற்கு முன் குமார் செப்டம்பர் 5 ஆம் தேதி டெல்லிக்கு சென்றார்.

என்ன நடக்கிறது என்று யோசனை செய்து பாருங்கள். மற்ற கட்சிகளில் இருந்து தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களை பாஜக உடைத்து வருகிறார்கள். இது என்ன மாதிரியான செயல்? இது முன்பு நடந்ததா? இது ஒரு புதிய விஷயம்”, என நிதிஷ்குமார் அவரது கட்சியின் தேசிய செயற்குழு மற்றும் கவுன்சில் கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

நிதிஷ் குமார் அவரது கட்சி எம்.எல்.ஏ.க்களை பாஜக வேட்டையாடியதாக கூறியிருந்தார்.  உரிமை மற்றும் அரசியலமைப்புத் தன்மை குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார்.  அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்தால், 2024-ல் மக்களாட்சி மிகவும் நன்றாக இருக்கும் எனவும் பாஜகவுக்கு எதிராக ஒன்றுபட்ட முன்னணிக்கு அழைப்பும் விடுத்துள்ளார்.

கெஜ்ரிவால் வியூகம்:

இந்தியாவை உலகின் முதல்நிலையான நாடாகா மாற்றுவோம் என்ற உறுதியோடு செயல்படுவதாக கெஜ்ரிவால் கூறியுள்ளார்.  இறக்குமதியைக் குறைத்து இந்தியாவிலேயே உற்பத்தி செய்வோம் என்ற திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் திட்டமும் உள்ளதாக கெஜ்ரிவால் கூறியுள்ளார்.  இந்தியாவை உலகின் சக்தி வாய்ந்த நாடாக மாற்றும் ஒரெ ஒரு கனவு மட்டுமே உள்ளதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  இந்தியா பணக்கார நாடாக மாற வேண்டும் எனவும் அதற்கு ஒவ்வொரு குடிமகனும் பணக்காரனாக மாற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.  ஏழை மக்கள் அனைவரும் பணக்காரராக மாறும் போது இந்தியாவும் பணக்கார நாடாக மாறிவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு குழந்தையும் நாடு முழுவதும் தரமான இலவச கல்வியை பெற வேண்டும் எனவும் ஒவ்வொரு நபருக்கும் தரமான இலவச சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் விருப்பப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.  இப்போதே அதற்கான பணியினை தொடங்க வேண்டும் எனவும் அப்போது தான் இந்தியா விரைவில் உலகின் முதல் நாடாக மாறும் எனவும் பேசியுள்ளார் கெஜ்ரிவால்.

மகாராஷ்டிராவில் இருந்து நெருக்கடி:

மகாராஷ்டிராவில் நடைபெற்று வந்த மகா கூட்டணி ஆட்சியை ஏக்நாத் ஷிண்டே மூலமாக உடைத்து ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்ததை மக்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.  மேலும் உத்தவ் தாக்கரேவுக்கு ஏக்நாத் ஷிண்டே இழைத்த துரோகத்தையும் மக்கள் அவ்வளவு எளிதாக மன்னிக்க வாய்ப்பில்லை எனவும் தெரிகிறது.  அடுத்து வரவிருக்கும் பொது தேர்தலில் நிச்சயம் பாஜக பின்னடைவை சந்திக்கும் வாய்ப்பே மிக அதிகம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தோல்வியடைந்த கோரமண்டல் திட்டம்:

ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே பாஜகவின் அமித் ஷாவால் கோரமண்டல் திட்டம் கையிலெடுக்கப்பட்டது.  கோரமண்டல் கடற்கரைப் பகுதிகளான தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவின் ஆட்சியைக் கொண்டு வருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.  ஆனால் பாஜக இத்திட்டத்தில் பெரும் தோல்வியையே சந்தித்தது.

கருத்துக்கணிப்பில் மோடிக்கு பின்னடைவு:

2024ல் நடைபெறவிருக்கும் பொதுதேர்தலை நோக்கியே அனைத்து கட்சிகளும் ஓடிக் கொண்டிருக்கின்றன.  தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஏற்கனவே பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் வெற்றிக்கான அனைத்து பணிகளையும் பாஜக செய்து வருகிறது. எதிர்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைவரா என்பதே இன்னும் கேள்வியாக உள்ள நிலையில் அவ்வாறு அவர்கள் இணைந்தால் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் பெரும் குழறுபடி ஏற்படும் என்பது அரசியல் விமர்சகர்கள் கருத்து.  இந்நிலையில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புள்ளதா என நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் மக்களுக்கு அதிருப்தி இருப்பது தெரிய வந்துள்ளது.  விலைவாசி ஏற்றம், அத்தியாவசிய பொருள்கள் மீதான வரி,  எரிபொருள்கள் விலையேற்றம் போன்ற பல குறைகள் மக்களிடையே உள்ளதாக அந்த கருத்து கணிப்பு கூறுகிறது.  மாற்று கட்சியை மக்கள் விரும்புவதாகவும் கருத்து கணிப்பில் தெரிகிறது.


மும்முனைத் தாக்குதலை எப்படி சமாளிப்பார் மோடி:

ஆகஸ்டு மாதத்தின் தொடக்கத்தில் பாஜக கூட்டணியிலிருந்து விலகி ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியுடன் இணைந்தார் நிதிஷ் குமார்.  பிரதமராகும் கனவிலேயே கூட்டணியிலிருந்து விலகியதாக பாஜக தரப்பில் அப்போது கூறப்பட்டது.   அதற்கு மறுப்பு தெரிவித்த நிதிஷ் குமார் பாஜகவிற்கு எதிராக ஒரு வலுவான கூட்டணி அமைப்பதே அவருடைய கனவு என தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் அவருடைய ஐக்கிய ஜனதா தளத்தின் கட்சி உறுப்பினர்கள் எதிர்கட்சிகள் விரும்பினால் நிதிஷ் குமார் பிரதமர் வேட்பாளராக இருப்பார் என தெரிவித்துள்ளது.

2024 பொது தேர்தல் மோடிக்கும் கெஜ்ரிவாலுக்குமானது என அறிவித்திருந்தார் டெல்லியின் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா.  மேலும் கெஜ்ரிவாலுக்கு பிரதமராகும் விருப்பமுள்ளதா என்ற கேள்விக்கும் ஆம் என்ற பதிலையே அளித்துள்ளார் சிச்சொடியா.

காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் தேர்தலில் வெற்றி பெறும் முயற்சியில் மக்களை ஒருங்கிணைக்கும் பல நிகழ்வுகளை ராகுல் காந்தி செய்து வருகிறார்.  விலைவாசி ஏற்றத்தை எதிர்த்து நடைபெற்ற ஆகஸ்டு புரட்சியும் இந்தியாவை ஒருங்கிணைக்கும் இந்திய ஒற்றுமை பயணமும் இதில் அடங்கும்.  

இவ்வாறு எதிர்கட்சிகள் பாஜக எதிர்ப்பதையும் தோற்கடிப்பதையுமே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன.  அதற்காக மக்கள் ஆதரவை பெறும் பல திட்டங்களையும் முயற்சிகளையும் கொண்டு செயல்பட்டு வருகின்றன.  தற்போது இருக்கும் இந்த மும்முனை தாக்குதலை பிரதம்ர் மோடி எவ்வாறு சமாளிக்க போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதையும் படிக்க: அமித் ஷா உயிருக்கு ஆபத்தா? கைது செய்யப்பட்ட ஆந்திர அதிகாரி!!!