வீட்டில் சமைத்து சாப்பிட்ட மாணவிக்கு தொண்டையில் சிக்கிய மட்டன் துண்டு...துடிதுடித்து உயிரிழந்த கல்லூரி மாணவி..!

கேரளாவில் வீட்டில் சமைத்து சாப்பிட்ட மாணவி ஒருவரின் தொண்டையில் இறைச்சி துண்டு சிக்கியதால் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தற்போது பார்க்கலாம்...

வீட்டில் சமைத்து சாப்பிட்ட மாணவிக்கு தொண்டையில் சிக்கிய மட்டன் துண்டு...துடிதுடித்து உயிரிழந்த கல்லூரி மாணவி..!

கேரளாவின் மலப்புரம் மாவட்டம் செத்தலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆசீப் இவரது மனைவி பாத்திமா ஹனான். 22 வயதான இவர் திருமணத்திற்கு பின்னர் மண்ணார்காடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை அறிவியல் பட்ட மேற்படிப்பு படித்து வந்தார். 

இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் மட்டன் எடுத்து சமைத்த பாத்திமா ஹனான் அதனை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்த இறைச்சி சற்று பருமனான அளவாக இருந்ததால் தொண்டைக்குழியில் சிக்கி கொண்டு மூச்சு திணறல் ஏற்படுத்தியதாக கூறப்படுகின்றது. 

இதனையடுத்து மாணவி பாத்திமாவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது தொண்டையில் சிக்கி இருந்த இறைச்சி மூச்சு குழாயை அடைத்துக் கொண்டதால் மூச்சு விட முடியாமல் கடும் அவதிக்குள்ளான பாத்திமா பரிதாபமாக உயிரிழந்தார்.  

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் பாத்திமாவின் இறப்புக்கு பருமனான இறைச்சித்துண்டு தான் காரணமா..? அல்லது இறைச்சி கெட்டு போயிருந்ததா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

அண்மையில் கேரளாவில் சவர்மா சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இறைச்சியால் மேலும் ஒரு மாணவி உயிரிழந்துள்ளது. அனைவரின் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.